கவி என்ற சொல்லை முன் விளக்கியிருக்கிறோம்.
ஒரு பொருள்மேல் கருத்துகளையும் கற்பனைகளையும் கவித்துப் பாடப்படுவதே கவிதை.
-----------------------
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை எல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்
என்பது கவிதை ; நூல்: அழகின் சிரிப்பு.
அப்படியானால் செய்யுள் என்பதென்ன? இதற்கு, பவணந்தியார் கூறிய வரையறவு : " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்" என்பது. ஒளவையாரின் இந்தப் பாட்டு ஒரு செய்யுள்:
ஈதல் அறன்; தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காத லிருவர் கருத்தொருமித்து ----- ஆதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
கவிதைகளால் ஆக்கப்பட்ட பெருநூல் காவியம்.
கவி + இயம் = காவியம்.
முதனிலை திரிந்த தொழிற்பெயர். முதனிலை நீண்டது காண்க.
பாடம் என்பதும் முதனிலை நீண்ட சொல்:
படி + அம் = பாடம். படி என்பது பாடி என்று திரிந்து, இகரமிழந்து பாட் ஆகி, அம் சேர்ந்து பாடம் ஆனது.
முன் காலத்தில் பாடங்களெல்லாம் பெரும்பாலும் பாடல்களாக இருந்தன. அவற்றை அவர்கள் இராகம் போட்டுப் பாடி ஒப்புவித்தார்கள். ஆசிரியர்களும் பாடியே சொல்லிக்கொடுத்தார்கள். திரு வி க அவர்களின் காலத்தில் இவ்வழக்கம் குறைந்தது, தம் நூலில் அவர் பாடியே படிக்கவேண்டும் என்றார்.
படித்தல் என்றாலே பாடுதல் என்ற பொருளும் உண்டு.
உன்ன நெனச்சேன்
ஒரு பாட்டுப் படிச்சேன்
என்ற திரைப்பாடலில் படிச்சேன் என்ற சொற்பயன்பாடு காண்க.
பாடு+ அம் = பாடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆகவே காவியம் என்ற சொல் முதனிலைத் திரிபு ஏற்ற சொல் என்பதுணர்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.