ஆங்கில ஆண்டாம் இருபதொன் றொன்பது
வீங்கிள வேனிலாய் விருந்து படைத்திடும்
ஓங்கிய மேனிலை உளத்தே ஒழுகிசை
பாங்குறத் தாவென வாவெனப் பணிவோம். 1
நல்லன விளைத்தோர் நலமே தொடர்கென
அல்லன குழைத்தோர் அறவழி செல்கென
இல்லென உள்ளன அனைத்தும் செழிக்கென
சொல்லுயர் தமிழால் சுவைக்கவி படைப்போம். 2
இனியது புதியது வருமிது சிறந்தது
கனியிது களிப்பினில் தனியிதென் றொளிர
இனியிதை வருகென அனைவரும் இணைந்து
பனிகுளிர் இன்புற நனிவிழ வெடுப்போம். 3
இருபதொன் றொன்பது : இருபது ஒன்று ஒன்பது
(2019)
வீங்கு இளவேனிலாய் = விரிந்த வசந்த காலமாய்.
விருந்து - புதுமை.
ஓங்கிய மேனிலை உளம் : உயர்ந்த மேலான பண்புள்ளம்.
ஒழுகிசை பாங்குறத் தா = நீரொழுகுதல் போன்ற
இனிய இசையைத் தருக.
2
அல்லன - தீயவை
குழைத்தவர் - கலந்து ஆக்கியோர்
இல்லென - வீடென்று அல்லது குடும்பமென்று.
சொல்லுயர் - புகழ் உயர்ந்த.
3
தனியிதென் றொளிர - தனி இது என்று ஒளிர
ஒளிர - ஒளிவீச
பனி குளிர் இன்பம் = மிகக் குளிர்ந்த இன்பம்.
பனியானது குளிர்தல் போல் (குளிர்ந்த) இன்பம்.
வல்லெழுத்து மிகாமல் புனையப்பெற்றது இவ்வரி.
குளிர் இன்பம்: வினைத்தொகை.
நனி - நன்றாக
விழவு = விழா , கொண்டாட்டம்.
புணரியல் திரிபுகள்:
தொடர்கென : தொடர்க என.
செல்கென - செல்க என
செழிக்கென - செழிக்க என
வருகென- வருக என
பிழைகள் தோன்றின் திருத்தம் பின்.
திருத்திய நாள் 31.12.2018
வீங்கிள வேனிலாய் விருந்து படைத்திடும்
ஓங்கிய மேனிலை உளத்தே ஒழுகிசை
பாங்குறத் தாவென வாவெனப் பணிவோம். 1
நல்லன விளைத்தோர் நலமே தொடர்கென
அல்லன குழைத்தோர் அறவழி செல்கென
இல்லென உள்ளன அனைத்தும் செழிக்கென
சொல்லுயர் தமிழால் சுவைக்கவி படைப்போம். 2
இனியது புதியது வருமிது சிறந்தது
கனியிது களிப்பினில் தனியிதென் றொளிர
இனியிதை வருகென அனைவரும் இணைந்து
பனிகுளிர் இன்புற நனிவிழ வெடுப்போம். 3
அரும்பொருள்:
இருபதொன் றொன்பது : இருபது ஒன்று ஒன்பது
(2019)
வீங்கு இளவேனிலாய் = விரிந்த வசந்த காலமாய்.
விருந்து - புதுமை.
ஓங்கிய மேனிலை உளம் : உயர்ந்த மேலான பண்புள்ளம்.
ஒழுகிசை பாங்குறத் தா = நீரொழுகுதல் போன்ற
இனிய இசையைத் தருக.
2
அல்லன - தீயவை
குழைத்தவர் - கலந்து ஆக்கியோர்
இல்லென - வீடென்று அல்லது குடும்பமென்று.
சொல்லுயர் - புகழ் உயர்ந்த.
3
தனியிதென் றொளிர - தனி இது என்று ஒளிர
ஒளிர - ஒளிவீச
பனி குளிர் இன்பம் = மிகக் குளிர்ந்த இன்பம்.
பனியானது குளிர்தல் போல் (குளிர்ந்த) இன்பம்.
வல்லெழுத்து மிகாமல் புனையப்பெற்றது இவ்வரி.
குளிர் இன்பம்: வினைத்தொகை.
நனி - நன்றாக
விழவு = விழா , கொண்டாட்டம்.
புணரியல் திரிபுகள்:
தொடர்கென : தொடர்க என.
செல்கென - செல்க என
செழிக்கென - செழிக்க என
வருகென- வருக என
பிழைகள் தோன்றின் திருத்தம் பின்.
திருத்திய நாள் 31.12.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.