எங்கும் அல்லது எல்லாம் என்று பொருள்தரும் பேச்சுவழக்குச் சொல்லே பூரா என்பது.
"வீடு பூரா தூசியாய் இருக்கிறதே" என்ற வாக்கியத்தில் இது எங்கும் என்று பொருள்படுகிறது.
புகுந்து உறுவதே பூரா. புகுதல் என்பது உட்செல்லுகை.
இது புகு> பூ என்று சொல்லின் முதனிலையில் திரியும்.
இதற்கு ஓர் உதாரணம் தருவோம்.
தொகு ( தொகுதல். தொகுத்தல் ) என்ற வினைச்சொல் தோ என்று சொல்லில் திரியும்.
தொகு > தொகுப்பு > தோப்பு. (வாழைத் தோப்பு முதலியவை).
இதுவுமது:
(திகை > திகைதி >) திகதி > தேதி. " உறுதிபெற்ற நாள், குறிக்கப்பெற்ற நாள்"
திகைதல் : உறுதியாதல்.
ஆகவே, புகு+ உறு + ஆ = பூறா > பூரா ஆனது.
சொல்லாக்கத்தில் றகரம் ரகரமாகிவிடும். பல சொற்களில்: பழைய இடுகைகளைப் படித்துக் கண்டுணர்க.
வெளியாட்கள் புகப்பார்க்கிறார்கள் என்பது பேச்சில் பூரப்பார்க்கிறார்கள் என்று வரும்.
எதுவும் அல்லது யாரும் எங்கு புகுந்தனரோ அதுவே அவர்களின் தொடக்கம். ஆகவே பூர்தல் - என்பதிலிருந்து பூர்வு> பூர்வம் என்ற சொல் அமைந்தது. பூர்வம் = தொடக்கம். பூர்வு + ஈகு + அம = பூர்வீகம்: ஈகு என்பது ஈங்கு என்பதன் இடைக்குறை. எங்கே முதலில் புகுந்தீர் அல்லது தோன்றினீர் அதுவே உம் பழைய இருப்பிடம். பிறத்தலும் இவ்வுலகில் புகுதலே.
எரியும் நெருப்பிலிருந்து வெளியில் புகுவதே புகை. புகு+ ஐ = புகை. வெளிவரலைப் புகுதல் என்றது ஒப்புமையாக்கம். வெளியி டங்களில் புகுதல் அல்லது பரவுதல்.
பூரம் = புகைவரும் எரியும் பொருள்.
கருப்பூரம் : கற்பூரம். ( எரியும் கல்போலும் பொருளிலிருந்து புகை வரும். அதனால் கற்பூரம் ஆனது ).
கருப்பூரம் - கர்ப்பூரம்
கல் பூரம் - கற்பூரம்.
இறுதியில் இவை ஒருபொருள் குறித்தன.
அடிக்குறிப்பு:
புகு ஊர்தல் எனினும் அமைதலின் இதை இருபிறப்பி எனலாம்.
பிழை காணின் திருத்தம் பின்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.