(தாழிசைகள்.)
இந்தவேலை அந்தவேலை எந்தவேலை
தானும்,
இருந்துவிட்டால் எழுதுவது நானுமேதான்
எதை?
சொந்தவேலை வந்தவேலை செய்துகொண்டி-
ருந்து,
சூரியெனக் கூரியதோர் விரைவதனிற்
பதை!
உந்துமன வேலைகளை ஓய்வுனவே
தள்ளி
ஒன்றுகூடச் செய்யேனேல் நன்றலாத
விதை,
வெந்துலகில் மேலெழுமோர் வெதும்புகிற
துயர்,
வீழ்ந்துவிட்டேன் உறங்கியதால் எழுந்திடநன்
னிலை.
அரும்பொருள்:
ஓய்வுனவே = ஓய்வு உன்ன ( ஓய்வு கருதி )
பதை : நெஞ்சு பதைத்தல் கொள்.
உந்துமன மனம் உந்துகிற.
விதை : தொடக்கம் என்னும் கருத்தில்.
நன்றலாத: நன்மை இல்லாத.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.