பொதுவாக மக்கள் தம் பேச்சில் வழங்கும் சொற்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தேஅவர்கள் பேச்சின் இயல்பு அமைகின்றது. இப்போது சில ஆங்கில மொழிச் சொற்களை எப்படி யவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று பார்ப்போம்.
இப்போது நாம் சினிமா என்று வழங்கும் சொல் "சினிமாட்டோகிராப்" என்ற சொல்லின் பாதி ஆகும். இங்கு முதல்பாதியை எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் டெலிபோன் என்ற சொல்லில் முதல்பாதியை எடுத்துக்கொள்ளவில்லை. இப்படி மேற்கொள்ளாமைக்குக் காரணத்தை நாம் ஊகிக்கலாம். டெலி என்னும் போது டெலி என்று தொடங்கும் பல சொற்கள் ஆங்கிலமொழியில் உள்ளன. குழப்பம் ஏற்படக்கூடும் என்பதுதான் காரணமா என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை. இதில் போன் என்ற இறுதிப்பாதியையே மேற்கொண்டுள்ளனர்.
கார் (from c 1300 ) என்ற சொல் இப்போது பெரிதும் வழங்குவதாகும். தமிழில் உந்து என்று சொல்கிறோம். இது (கார்) ஆங்கிலத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட சொல். இது ஆங்கிலோ பிரஞ்சு மொழியில் வழங்கியது. இதற்குமுன் இலத்தீனில் இருந்துள்ளது. செல்டிக் மொழியில் இரு சக்கரங்கள் உள்ள போர் வண்டியை இது குறித்தது. இப்போது நாலு சக்கரமாகிவிட்டாலும் மற்றும் போருக்கு உரியதாக இல்லாவிட்டாலும் இதைக் கார் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.
cart என்பதோ தொட்டிலையும் ஒரு காலத்தில் குறித்தது, மரண தண்டனைக்கு கொண்டுசெல்லப்படும் கைதிகளின் வண்டியையும் குறித்துள்ளதாம். கூடையையும் குறித்துள்ளதாகக் கூறுவர், இதற்கும் கார் என்பதற்குமுள்ள உறவு புரியவில்லை.
வண்டிகள் இருவகை: இழுவை வண்டிகள் தள்ளுவண்டிகள் என்பனவாம்.
லோர், லாரி என்பன இழு(வண்டி) என்று பொருட்படும் லரி என்ற சொல்லினின்று பெறப்பட்டிருக்கலாம் என்பர். போக்குவரத்துச் சட்ட நூல்களில் மோட்டோர் ( மோட்டார்) என்ற அடைமொழியுடன் தான் இதுபோலும் சொற்கள் கையாளப்பட்டிருக்கும் லாரி என்பது பிற்காலத்தில் தொடர்வண்டித் துறையில்தான் முந்துவழக்குடையதாய் இருந்ததென்பர். பிற்காலத்தில் சாலைகளில் செல்வன குறிக்கப்பட்டன.
டெலி விஷன் ( தொலைக்காட்சி ) என்பதை இப்போது டிவி என்றுதான் பலரும் சொல்வர். டெலிபோனை போன் என்றதுபோல டெலிவிஷனை விஷன் என்று யாரும் சொல்வதில்லை. இதற்கு எழுத்துக்குறுக்கச் சொல்லே பயன்பட்டுவருகிறது. போனுக்குத் தொலைபேசி என்பது முழுதும் வழங்காவிட்டாலும் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. கைப்பேசி என்பது கடைகளின் விளம்பரங்களில் கையாளப்படுகின்றது.
சொற்களைக் குறுக்காமல் மக்கள் வழங்குவதில்லை. இதை அறிஞர் வரதராசனார் முயற்சிச்சிக்கனம் என்பார்.
சில சொற்களைக் குறுக்கமுடிவதில்லை. இயர் ரிங்க் என்பதை இயர் என்றோ ரிங்க் என்றோ குறுக்கினால் பொருள்மாறாட்டம் ஏற்படும். காதணி என்பதைக் காது என்றோ அணி என்றோ குறுக்க இயலவில்லை.
கணினி என்பதை இப்போது கணக்கு இயந்திரமாக நாம் பயன்படுத்துவதில்லை. முன் கால வழக்கை ஒட்டிய பெயர் இதுவாகும், கல்குலேட்டர் என்ற கணக்கி தனியாக பயன்பாட்டில் உள்ளது. கணக்குப் பார்பவர்கள் முன்பு "கணக்கப்பிள்ளைக" எனப்பட்டனர். இப்போது கணக்கர்கள் என்பது இவர்களுக்குப் பொருத்தமே. கணிதர்கள் என்பதும் அமையும், பழங்காலத்தில் கல்லைக் குலுக்கிக் கணக்குப் பார்த்தபடியால் "கல்குலஸ்" என்ற இலத்தீன்சொல் அமைந்தது. இதனைப் பலர் அறிந்ததில்லை.
மறுபார்வை செய்யப்படும்.
பிழைத் திருத்தம் பின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.