வருதல் என்னும் வினையினடிப்படையில் உண்டாகி உலவும் சொற்கள் பலவாகும். இவற்றில் சிலவற்றையாவது அணுக்கமாக நோக்கின், அவை வருதலடிப்படையின என்பது தெற்றெனப் புலனாகும். வேறு சொற்களை அடியாகப் பிறழ உணர்ந்து அயர்ந்தோர் சிலர் உள்ளனர்.
ஆங்கில வருடக் கணக்கு, அறுபதாண்டு சுழல்வட்டத்தில் அடங்காதது. இன்னும் மூவாயிரமாம் ஆண்டு நாலாயிரமாம் ஆண்டு என்று போய்க்கொண்டிருக்க வல்லது ஆகும். ஆனால் தமிழ் மாதங்கள் என்று சொல்லப்படுபவை அறுபது எனப்படும்; மற்றும் ஒரு சுழற்சியில் அறுபதும் முடிந்துவிட்டால் மீண்டும் ஒன்றாம் ஆண்டிலிருந்து தொடங்குபவையான ஆண்டுகள் என்பது நீங்கள் அறிந்ததே. இதிலென்ன இடர் என்றால் ஒரு மன்னன் எந்தக் காலத்தான் என்று பார்ப்பதற்கு எத்தனை சுழற்சிகள் என்று அறிந்தாலே கணக்கிடலாகும்.
ஆண்டு என்பது வருடம் எனப்படும். இது வருஷம் எனவும் சொல்லப்படும். இது மழையின் தொடர்பாக அமைந்த சொல் என்பர்.
மழையும் வருவதுதான்; அதேபோல் ஆண்டுகளும் ஒன்று முடிய இன்னொன்று வருபவைதாம்..
வரு+ உடம்= வருடம் > வருஷம்.
மழையினுடன் வருவது வருடம். உடம் என்பது உடன் என்பதே.
உடம்படு மெய் என்பதில் உடன்படுத்தும் மெய் என்பதே பொருள்.
வருஷம் எனபது திரிபு.
அம் என்று முடியும் சில அன் என்றும் முடியும்.
அறம் > அறன் என்பது காண்க.
இதையும் வாசித்து மிக்கது அறிக:
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_0.html
திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.