Pages

ஞாயிறு, 11 நவம்பர், 2018

ஸகரம் ஷகரம் ஒற்றுகள் தோன்றிய சொற்கள் சில

ஒரு கட்டிடம் கட்டுங்கால்,  நிலத்தை நன் கு அகழ்ந்து  தூண்களை உள்ளிறக்கி அதன்  பிணிப்பில் சுவர் கூரை முதலிய அமைத்துக் கட்டுவது வழக்கம்.  இந்த வேலையைப் பிராமணர்கள் செய்ததில்லை.  அவர்கள் கட்டிட வேலைக்காரர்கள் அல்லர்.  இந்த வேலையைச் செய்தவர்கள் தொழிலாளர்கள் தாம்.

அஸ்திவாரம் என்பது கட்டுமான ஊழியர்கள்  அமைத்த பெயரே.   அதில் இலக்கணப் பின்புலம் ஏதேனு இருக்குமானால் அது   ஆகூழால் (அதிர்ஷ்ட வசமாக )  அமைவுற்றதே ஆகும்.  அதாவது சொல்லமைப்பு என்று கருதாமல் காலப்போக்கில் பேச்சுவழக்கில் அமைந்த சொல்  இது  ஆகும்.  இதற்கொரு சொல் கொடுக்குமாறு புலவரைக் கேட்டு அவர் அமைத்தால் இரண்டு மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்.  அத்தகையோர் கடினச் சொல்லொன்றை அமைத்தளிப்பதே பெரும்பான்மை.  கட்டிட வேலை என்பது இரும்படிக்கும் இடத்துக்குச் சமானமானது;  அங்கு ஈயாகிய புலவருக்கு என்ன வேலை என்பதே பொருத்தமான சிந்தனை.

சிறுசிறு மனைகளைக் கட்டிய தொழிலாளிகளே இச்சொல்லை அமைத்தனர். அவர்கள் மண்வெட்டியும் கூடையும் கொண்டு மண்ணை அழுத்திவாரி அப்புறப்படுத்தித் தூணை நட்டனர்.  அக்காலங்களில் கற்றூணே  ( கல் தூணே) பெரும்பான்மை.

அழுத்திவாருதல் > அழுத்திவாரம் > அஸ்திவாரம்.

பேச்சுவாக்கில் ழு என்பது ஸ் ஆகிவிட்டது.   உயர்த்தி என்ற சொல் ஒஸ்தி என்று ஒலிக்கப்படுவது எப்படியோ இதுவும்  அப்படியே..

 இன்னொரு சொல்:


உதாரணமாக:  கழுத்தூறி > கஸ்தூரி.

கஸ்தூரி மான் ஒரு வாசனையை வெளிப்படுத்தும் மான். அதன் கழுத்துப் பக்கமாக ஊறிவந்ததென்பது சிற்றூரார் நம்பிக்கை.  அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல் அமைந்துவிட்டது.

ஸ் போன்ற ஒலிகள் இயற்கையில் இல்லாதவை அல்ல.  அதுதான் பாம்பு சீறும்போது காதில் விழுகிறதே!  வாணம் விடும்போதும் புஸ் என்று போகிறதே! மனிதனுக்கும் அது ஒவ்வாத ஒலி அன்று.  இலக்கணம் செய்த தொல்காப்பியனார், பல்காப்பியனார் , பல்காயனார், காக்கைபாடினியார் முதலியோர் அதை  ஓர் எழுத்தொலியாக ஏற்கவில்லை.  அக்காலத்திய மொழி நிலை அது.  ஆகவே மொழிமரபு.

சீன மொழியில் பெரும்பாலும் சொல்முதலில் அது வரும். ஸியாவ், ஸ்யோங்க், ஸியா  ஸெங்க் எனப்பல உள்ளன.

தொல் மொழியான அரபியிலும் இத்தகு ஒலிகள் உள.

ஏனைத் திராவிட மொழிகளிலும் உள.

பிற்காலத்தில்  ழுகரத்தை விலக்கிவிட்டுச் சில சொற்கள் அமைந்தன. எடுத்துக்காட்டு:

விழுபுலம் >  விபுலம்.  (விழுமிய அதாவது சிறந்த நாட்டினர்). பிற வந்துழிக் குறித்து மனப்பாடம் செய்க.

அழுத்திவாரம் >  அத்திவாரம் (  ழுகரம் வீழ்ச்சி)
அத்திவாரம் >  அஸ்திவாரம்  ( ஒரு ஸ்கர ஒற்று தோன்றல்).

தவணைக்குக் கெடு என்றும் சொல்வர்.  காலவரை முடிந்தது என்றால் கெடு முடிந்தது என்பர்.  கெடுதல் என்ற சொல்லின் முதனிலை கெடு  -. குறித்த காலத்தில் எல்லை கெடுகிறது என்பது பொருள். எல்லை -  கால எல்லை.


கெடுத்தி > கெஸ்தி > கிஸ்தி.

கெடு > கிடு > கிஸ் > கிஸ்தி எனினும் அதே.

பீடுடைய மன்னவன் பீடுமன்.  அவன் பீஷ்மன் ஆனது காண்க.  டு >ஶ்.


திரிபுகளால் மகிழ்க.



திருத்தம் பின்.
தன்-திருத்த மாற்றங்கள் பின்னர் மறுபார்வை.
சில பிழைகள் சரிசெய்யப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.