இரும்பில் பிடிப்பது துரு.
இரும்பு என்பதைத் தமிழர் பிற்காலத்து அறிந்துகொண்டனர். உந்துவண்டிகள் வந்தபின்பு, சிலர் ஒட்டுநர்களாகப் பயிற்சி பெற்று ஓட்டி ஊதியம் பெற்று வாழ்க்கை நடாத்துகின்றனர். அதுபோல இரும்பு வந்தபின்பு அதை உருக்கவும் அதனால் ஆயுதங்கள் செய்யவும் தமிழர் அறிந்துகொண்டனர்.
இரும்பு பொன் என்ற இரண்டிலும் பொன்னையே அவர்கள் முதலில் அறிந்திருந்தனர். இரும்பு பின் வந்தது, ஆகவே அதை இரும்பொன் என்றனர். இரும்பொன் என்றால் பொன்னை விடப் பெரியது என்று பொருள். இப்படி ஒப்பாய்ந்து பெயரிடுவதென்றால் பொன் முன் வந்தது என்ற பொருள் சொல்லாமல் விளங்கும்.
இரும்பொன் என்பது பின் இரும்பு என்று திரிந்தது - நல்லபடி சொல்லானது.
துரு என்பது இரும்பைத் துருவிச் செல்வது. முதனிலைத் தொழிற்பெயர். எண்ணெய் சாயம் போலும் பொருள்களால் தடையேதும் ஏற்படாவிட்டால் துரு இரும்பைத் தின்றுவிடும். ஆனால் நாளாகலாம்.
இரும்பு நல்லது; துரு கெட்டது என்று மக்கள் அறிந்துகொண்டனர். எளிதில் அப்போது கிட்டாத இரும்பை அருந்துபொருள் துருவும் துருவாகும். இதிலிருந்து துரு துர் என்று குறுகிக் கெடுதலை அறிவித்தது.
எடுத்துக்காட்டு: துரு > துர். பலன் - துர்ப்பலன்.
அதிருட்டம் - துரதிருட்டம்.
துரோகம் என்பதென்ன? துரு ஓங்கிய நிலையே துரோகம் ஆகும்.
துரு = கெடுதல். (பெறப்பட்ட பொருள்)
ஓகம் = ஓங்கிய நிலை.
ஓ > ஓங்கு
இடைக்குறைந்து : ஓகு. பின்: ஓகு+ அம் - ஓகம்.
துரு+ ஓகம் = துரோகம்: கெடுதல் ஓங்கிய செயல்.
சொல்லமைப்பை ஆய்ந்து பெறப்படும் பொருள் இன்றைய வரையறவுக்கு ஏற்றதாய் முழுமையானதாய் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. இதனைப் புரிந்துகொள்ளாத கற்போன் எவனும் ஓர் அறிந்த ஆசிரியனிடம் மேலும் விளக்கம் பெற்றாலே முடியும். இங்கு சொல்லமைப்புப் பொருள் சொற்பொருளினை நோக்கச் சற்றுப் பொதுமை வாய்ந்ததாய் உள்ளது. சரி, ஸ்பீக்கர் ( நாடாளுமன்றத் தலைவர் ) என்ற சொல் பேசுவோன் என்றுதானே பொருள்படுகிறது. அதன் சொற்பொருளுடன் அது ஒத்து நிற்கவில்லை அன்றோ? அதனை நன்கு அறிந்துகொள்ளச் சொல்லியல் அறிவுடன் வரலாற்றறிவும் தேவைப்படுகிறதே!
இங்கிலாந்தில் மக்கள் பதிலாளர்கள் வைத்த கோரிக்கைகளை, தெரிவித்த கருத்துக்களை அரசரிடம் அல்லது அரசியிடம் சென்று தெரிவித்தவரே பேசுவோனாகிய ஸ்பீக்கர். மற்ற பொதுவர்கள் (காமன்ஸ்) அரச அரசிகளைக் காணற்கு "அருகதை" அற்றவர்கள். இப்படியே ஸ்பீக்கர் என்ற சொற்பொருள் உருப்பெற்றது. சில சொற்கள் கால ஓட்டத்தாலும் வரலாற்றுப் பின்னணியாலும் தம் பொருளைப் பெறுகின்றன. இத்தகைய பொருளைப் பெறுபொருள் என்று குறித்துள்ளேம். புகார்மனு, புகார் என்ற சொற்களின் பொருளை விளக்கியுள்ளேம். உருது கிருது ஒன்றுமில்லை. இப்போது புகார் என்ற சொல்லை எந்த மொழியினரும் பயன்படுத்தலாம்.
அறிந்து மகிழ்க.
சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன.
பிற தோன்றின் ( மென்பொருள் தன்- திருத்தத்தால் ) உரிய நேரத்தில்
செம்மையுறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.