Pages

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

அன்பு அனுப்பு அன் அண் பொருள் அறிதல்

அனுப்பு என்ற சுட்டடிச் சொல்

தமிழ் மொழியில் சுட்டுச் சொற்கள் எவை என்றால் அவை அகரம், இகரம் மற்றும் உகரம் முதலியவை. தமிழ் மொழியில் மிகப் பலவாகிய பதங்கள்
இவற்றைக் கொண்டு இயல்பான முறையில் உருவானவை ஆகும்.

அனுப்பு என்ற சொல்லுக்குச் சிலர் செலுத்து, வருத்து என்றவற்றை நிகர்ச்சொற்களாய் வலிந்து எழுதுவதுமுண்டு. அனுப்பு என்பதே இன்றமிழ்ச் சொல் ஆதாலால் பொருந்துமிடத்து அதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

அ என்ற தலையெழுத்து அங்கு என்று பொருள் படுவது. இதனின்று அமைந்த அன்~ மற்றும் அண்~ என்பவை அணுகு, அடுத்துச்செல், பக்கத்தில் போ என்று பொருள்படுவது. அண் ( அணுகு ) என்பது அன் என்றும் வரும். அ என்பதே சுட்டு மூலம். அன் அண் என்பன அதனின்று வளர்ந்த மிகுதிகள்.

உ என்ற இரண்டாம் எழுந்து உங்கு அல்லது முன் என்று பொருள்தரும்.

பு என்பது ஒரு வினையாக்க விகுதி.

அன் + +பு என்பது முன் போகும்படி செய் என்பதே.

எல்லாரையும் அணைத்துச் செல் என்னும்போது அண் என்பதன் பொருளை அணை என்பதில் தெரிந்துகொள்ளுங்கள். அண் என்பது அங்கிருப்பதனை உட்படுத்திக்கொள்வது என்பதாகப் பொருள்தரும். அனைத்தும், அனைவரும் என்ற பதங்களில் இச்சொற்கள் எல்லோரையும் உட்படுத்தியே செல்கிறது. இது பொருளின்படி பார்த்தால் அணைவரும், அணைத்தும் என்றுகூட அமைந்திருக்கலாம். பொருளில் அழிவில்லை என்றாலும் சொல் அனைத்து, அனைவரும் என்றிருப்பதால் மரபின்படி அனை என்றுதான் நாம் சொற்றொடக்கம் செய்கின்றோம் என்பதறிக. ஆகவே அண் = அன்.

ஆதலின் அன்+ + பு என்பது முன் அடுத்துப் போம்படி செய் என்பது.

அன் என்பது மன நெருக்கத்தை குறிக்கவும் வரும் அடியாகும். அன்பில் இருவர் நெருக்கம் கொள்வது அறிக. அன் - அன்பு.  பு விகுதி.   அன் என்பதே அடி.   0னகரத்துக்குப் பிந்தியது ணகரம்.  இரு சுழிகள் இட்டபின்னரே மூன்றாவதை இடுகிறோம்.  தேகிகள் இருவர் நெருங்கிப் பழகுதலே பின்னர் அவர்களிடை மன இணைப்பு உண்டானதாக அறியப்படும்.

இன்னும் ஆழ்ந்து சிந்தியுங்கள். அன்பு என்பதற்கும் அனுப்பு என்பதற்கும் ஓர் உகரமே வேறுபாடு. ஒன்று அன்+பு. இன்னொன்று அன்+ +பு. அன்பில் மனத்தை அனுப்புகிறோம். அனுப்பு என்பதில் பொருளையோ மனிதரையோ அனுப்புகிறோம். எல்லாம் அடுத்து நெருங்குவதுதான். நெருங்கும் பொருளிலே வேறுபாடு. இப்படி அறியவே, அனுப்பு என்பதும் நல்ல தமிழ் என்பது வேறுவிளக்கம் வேண்டாமல் நன்`கு புரியும்.

மலையாளத்தில் அயிச்சு என்பர். அனுப்பினேன், அனுப்பினான் என்பவையும் ஏனைப் பொருளுருக்களும். அ இ அங்கு செலுத்து, இங்கிருந்து என்பதே சொல்.  அயிச்சு என்னாமல் இயச்சு என்று சொல் அமைந்திருக்கலாம்.  ஆனால் மொழியில் அப்படி அமையவில்லை. அமைந்தவற்றுக்கே இலக்கணம். அமையாதன உட்படாதனவே.  இதன் காரணம் இயங்கு என்று ஒரு சொல் இருப்பதே.  இ+அ+கு:  இயங்கு.  இப்படிச் சொற்களை ஆய்ந்து முரண்களையோ பிற வடிவங்களையோ கண்டு வாதிடாமல் மரபு போற்றவேண்டும்.  ஓர் எல்லைக்குப்பின் மரபு குறுக்கிட்டு வாதத்தை நிறுத்திவிடும்.  நாட்டு எல்லை போல்தான்.  சிங்கப்பூர் எல்லை ஜொகூர் நீரிணை வரைதான். மொழியும் அப்படியே. எல்லையே மரபு.

காரணங்களை அறிந்து மரபுடன் பொருத்தி அகமிக மகிழ்வீர்.

திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.