பார்க்கின்றேன் பார்க்குமிடம் எங்குமெங்கும் --- ஒரு
நீக்கமற நிறைந்துள்ளான் மகிழ் பூரணன்;
மேற்கினிலே கிழக்கினிலே திசைஎட்டிலும் --- அவன்
மிசையிருப்பான் அகத்திருப்பான் இடமெங்கிலும்.
தோற்றுருக்கள் தம்மிலுமே பகுந்தும்நிற்பான்;
ஆக்கத்திலும் வந்து முன்நிற்கிறான் --- இந்த
அகிலமெல் லாமவனே அயிர்ப்பதில்லை.
பாடல்: சிவமாலா.
படங்கள் உதவியவர்: மோகன் (குருசாமி).
அரும்பொருள்:
மிசை - மேலே; அகத்து - உள்ளே; எங்கிலும் - எங்கேயும்;
பகுந்து - வெவ்வேறாக; அகிலம் - உலகம்.
அயிர்ப்பதில்லை - சந்தேகமடைவதில்லை.
இறைப்பற்றர் மோகன்
(ஐயப்ப குருசாமி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.