Pages

சனி, 8 செப்டம்பர், 2018

ஏழுமலை பக்தர் உள்ளம் வாழுமலை


ஏழுமலையில் சிங்கப்பூர் பக்தர்கள்.
-------------------------------------------------

சிங்கப்பூர்ப்  பத்தர்கள் பூசை செய்தார்
சிறப்பாக மலையானைப் போற்றி நின்றார்:
"எங்கப்பன் எங்கையன் என்றும் எம்பால்
இடையின்றிப் படைவெல்லும் வன்மை சேர்ப்பான்
தங்கப்பொன் அணிகலன்`கள் தந்து நிற்பான்
தடைநீக்கிக் குடைக்கீழூர் தண்டி கூட்டி
உங்கட்கும் ஒண்செல்வம் கொட்டும் நாளை
ஓடோடி வரச்செய்வான்"  நாடிச் செல்வீர்!!


மலையான் - ஏழுமலை யப்பன்
தண்டி - தகுதி
 எங்கப்பன் எங்கையன் -  பேச்சு வழக்குத் துதிகள்.
தங்கம் - கலப்பில்லாத சீனத் தங்கம்
தங்கம் என்பது எதுகை நோக்கித் "தங்க(ப்)"
என்று நிறுத்தப்பட்டது. இது தொகுத்தல்.
அன்றி "தங்கப் பொன்" -  தங்குவதற்குப் பொன்
என்று பொருளுரைப்பினும் நற்பொருளே. தங்குவதாவது:
செல்வாகாமல் இருப்பில் வைத்தல்.
பொன் - பிரிட்டீஷ் தரத்துப் பொன்.
தண்டி - பெரிது என்று உலகவழக்கில் உள்ளது. " அம்மாந்தண்டி
மூக்கு" என்றால் பெரிய மூக்கு என்பது.  வசூல் செய்வோனும்
தண்டியே.  இங்கு அப்பொருளில் இல்லை.
"குடைக் கீழ் ஊரும் தண்டி (தகுதி)".

 Devotee Mohan is with  the  company  director. (engineer by qualification).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.