தெய்வத் தைத்தேடிக் கண்ட தேனுலா---- வான்
தெரியக்
காட்டிய தேகுளிர் வான்நிலா
வையத்
தழகெலாம் காட்டும் வாரிகள்
---- எல்லும்
வானில்
எழுமுன் னர்ஒளி சேரிருள்.
பச்சைப்
பசேலென் றேமரம் தோகைபோல்
--- விரிந்து
பார்க்க
விழிகட் குள்அழ கேகுமே.
நிச்ச
லும்இக் கவின்தனைக் காண்பவர்
--- இறை
நேர்ந்த
அருள்தனை நன்கு பூண்பவர்.
வெள்ளி
உருக்கித் தெளித்த போர்வையோ
--- இங்கு
விரித்த
ஏரி கொண்டு காட்டும் நீரினில்;
துள்ளி
எழுந்து விழும்பெரு மீன்`களைக்
----- கண்டு
தூக்கம்
கலைந்தது பின்வந்த தூக்கமே.
{ ஒரு புகைப்படத்துக்கு ஒரு செய்தி விளக்கமாக எழுத முற்பட்டுப்
பின் ஓர் இசைப்பாடலாக வெளிப்பட்டு, இப்போது இதை ஒரு கவிதை
போல் மாற்றியமைத்து இங்கு வெளியிடுகிறோம். இசைப்பாடலாக எம்
சொந்த மெட்டில் அமைந்தது. இப்போது வேறுபட்டுள்ளது. }
தேனுலா : இனிய உலவுதல்.
வாரிகள்: ஆறுகள்.
எல்லும் : சூரியனும்.
ஒளிசேர் இருள்: உதய நேரத்தின் முன்.
நிச்சலும் - நித்தமும்; நாள்தோறும்
கவின்: அழகு
பூண்பவர்: பெற்றுக்கொண்டவர்.
இறை: கடவுள்
நேர்ந்த : கொடுத்த.
பின் வந்ததூக்கமே: பின் வந்தது ஊக்கமே.
{ ஒரு புகைப்படத்துக்கு ஒரு செய்தி விளக்கமாக எழுத முற்பட்டுப்
பின் ஓர் இசைப்பாடலாக வெளிப்பட்டு, இப்போது இதை ஒரு கவிதை
போல் மாற்றியமைத்து இங்கு வெளியிடுகிறோம். இசைப்பாடலாக எம்
சொந்த மெட்டில் அமைந்தது. இப்போது வேறுபட்டுள்ளது. }
தேனுலா : இனிய உலவுதல்.
வாரிகள்: ஆறுகள்.
எல்லும் : சூரியனும்.
ஒளிசேர் இருள்: உதய நேரத்தின் முன்.
நிச்சலும் - நித்தமும்; நாள்தோறும்
கவின்: அழகு
பூண்பவர்: பெற்றுக்கொண்டவர்.
இறை: கடவுள்
நேர்ந்த : கொடுத்த.
பின் வந்ததூக்கமே: பின் வந்தது ஊக்கமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.