பரிகாரம் என்ற பதத்துக்கு நல்ல தனித்தமிழ்ச் சொல் ஓம்படை என்பதாகும்.
போக்கடி என்பதும் பயன்படும்: இதற்கு ஒரு போக்கடி இல்லாமற் போய்விட்டது என்பர்.
பிதிகாரம் என்று தேவாரத்தில் வரும் சொல்: பிரதிகாரம் என்பதன் திரிபு. பிரதி> பிதி. ரகரம் இடைக்குறை.
அரணம் எனலும் ஆகும். அரண்> அரணம்.
பரிதல் என்பது அறுத்தல் ஒடித்தல் வெட்டுதல் என இன்னும் பல பொருள் உள்ள சொல்.
பரி (வினைச்சொல்)+ கு (இடைநிலை ) + ஆர் + அம் (விகுதி).
ஆர்தல் என்பதும் பல்பொருள் ஒருசொல். நிறைதல் என்பதும் அவற்றுள் ஒன்று.
பரிகாரம் என்பது நிறைவாக வெட்டி நீக்குதல் என்று பொருள்தரும்.
அரித்தல் என்பது அரித்தெடுத்தல் என்று பொருள்தரும்.
பரி+கு+ அரித்தல் = பரிகரித்தல். நீங்குதற்குரியன நீக்குதல்.
பரி+காரம் என்று பிரித்துப் பொருள்சொல்வது பழைய வாத்தியார்களின் வழக்கம்.
பரிகாரத்தில் ஒருவகை: மந்திரம் சொல்லி ஒன்றை எரித்துக் கரியாக்கி எண்ணெய் விட்டுக் குழப்பிப் பொட்டாக வைத்துக்கொள்வர்.
இது பரி + கரித்தல். ( கரியாக்குதல்)
திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.