தமிழ் நாட்டின் மற்றும் தென்னகத்தின் தலைசிறந்த இசையமைப்பாளர் இசைஞானி + இளையராஜா சிங்கப்பூருக்கு அண்மையில் (16.8.2018) வந்திருந்த போது துர்க்கையம்மன் சுமங்கலிப் பூசையில் பெருந்தொண்டாற்றிப் பாராட்டைப் பெற்ற நம் பக்தர் ஐயப்ப குருசாமி மோகன் அவர்களும் அவருடைய தமக்கையாரும்* அவரைச் சென்று கண்டு தமது பணிவன்பைத் தெரிவித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இங்குப் பதிவு செய்யப்படுகின்றன. கண்டு மகிழுங்கள்.
திரு மோகன் அவர்கள் சபரிமலைப் பக்தரும் குருசாமியும் ஆவார். அம்மன் பக்தியும் மிக உடையவர். இசையிலும் பெரிய நாட்டம் அவருக்கு உண்டு. ஐயப்ப குழுப்பாடல்களிலும் (பஜன்) நன்`கு பாடுபவர். இவருடைய சொந்தத் திருமணத்திலும் சில பாடல்களை வழங்கி யாவரையும் மகிழ்வித்தவர்.
முன் இங்கு வெளியிட்ட படத்தில் இவர் இவருடைய இல்லாள் ரஜ்னி ராயுடன் காட்சிதருகிறார். அதை அங்குக் காணலாம். சொடுக்கவும்.
http://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_45.html
இவர் மென்பொருள் பொறியியலாளர். இவர் துணைவியார் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார். இவருடைய சொந்தக் குழும்பு (கம்பெனி) சிங்கையில் செயல்படுகிறது.
இசைக்கலையே இனிதாமே
மேலான கானத்திலே ஆனந்தம்
இசைக்கு மயங்காதார் யாரே
என்பது உடுமலை நாராயணக்கவியின் வரிகள். திரு மோகன் அவர்களும் இசையால் கவரப்பட்டவர்.
அடிக்குறிப்புகள்
+இசைஞானி- this word could not be typed as the software presented some
difficulty. This has been overcome by pasting it from elsewhere. njA would not work
* நினைக்கிறோம் தமக்கை என்று. இளையராஜாவின் உதவியாளராகவும் இருக்கலாம். இனிமேல்தான் தெரியும்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.