அமைதிக் கனாக்காண ஆர்நகரம் சிங்கை;
சுமையாய் உலகுறுத்தும் குண்டை=== தமைக்கண்ட
மாத்திரத்தில் மாற்றம் நினைக்காமல் பாத்திரத்தில்
கீழ்த்தளத்தில் ஓட்டையோ வீசுதல்போல் ===நேர்த்திறமாய்
கிம்மை எதிர்கொண்ட கேடில்லா மாநாட்டில்
நம்முன் உலகின்முன் நன்மனத்தால் ==== செம்மையாய்த்
தூக்கி எறிந்திடுவார் தொல்லை களைந்திடுவார்
நாக்கில் செழுந்தேனர் நம்திரம்பும் ----நோக்குங்கால்
வெற்றியே கொள்வாரே வீரமாய் நின்றிடுவார்
சுற்றுலகில் எல்லாம் சுடர்.
இதன் பொருள் :
அமைதிக் கனா காண --- சமாதானக் கனவு மேற்கொள்ள;
ஆர் நகரம் --- நிறைவான நகரம்; சிங்கை --- சிங்கப்பூர் ஆகும்;
சுமையாய் -- - ஒரு தலையின்பாரமாக;
உலகுறுத்தும் -- உலகத்தை உறுத்திக்கொண்டுள்ள;
குண்டை --- ( உலகை அழிக்கும் ) வெடிகளை;
தமைக்கண்ட மாத்திரத்தில் மாற்றம் நினைக்காமல் --
கிம் என்பவர் டிரம்ப் தம்மைக் கண்டபொழுது தம்
எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல்;
பாத்திரத்தில் கீழ்த்தளத்தில் ஓட்டையோ வீசுதல்போல்--
ஓர் ஏனத்தில் அடியில் ஓட்டையானால் வீசுவதைப்போல;
தூக்கி எறிந்திடுவார் --- வைத்துக்கொள்ளாமல் அப்புறப்
படுத்திவிடுவார்;
தொல்லை களைந்திடுவார் - உலகிற்கு அதை
வைத்திருப்பதனால் வரும் தொல்லையைக் களைந்து
விடுவார்;
நேர்த்திறமாய் - நேர்முகமாய்;
கிம்மை எதிர்கொண்ட - வடகொரியத் தலைவர் கிம்மைச்
சந்தித்த
கேடில்லா மாநாட்டில் -- கோளாறு இல்லாத கூட்டத்தில்;
நாக்கில் செழுந்தேனர் திரம்பும் -- இனிப்பாகப் பேசும்
ஆற்றல் வாய்ந்த அதிபர் டிரம்பும்;
நோக்குங்கால் -- நாம் கணக்கிடும் இவ்வேளையில்;
நம்முன் - மக்களாகிய நம் முன்பாகவும்;
உலகின்முன் -- உலக நாடுகளின்முன்னும்;
நன்மனத்தால் - உலக அமைதி நாடும் நல்ல உள்ளத்தினால்;
வெற்றியே கொள்வார் -- வெல்லும் தரமே அடைவார்;
வீரமாய் நின்றிடுவார் - பேச்சில் பின்வாங்குதல் செய்யார்;
சுற்றுலகில் -- நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில்;
எல்லாம் சுடர் -- அனைத்தும் ஒளியாகவே நிறைவாகும்.
பிற்குறிப்பு: 13 சூன் மாதம்:

நம் கவிக்கனவு போலவே திரம்பும் கிம்மும் இணக்கமான முறையில் அணுவாயுதக் களைவுக்கு ஒப்பிய நிலையில் மாநாடு முற்றுப்பெற்றது
உலகுக்குக்கும் மகிழ்ச்சி. சிங்கைக்கும் மகிழ்ச்சி. இருதலைவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் உரித்தாகுக. வையகம் வாழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.