ஓங்குமிவ் வுலகமும் தாங்கிநிற் கின்றது நீரை;
ஏங்குதல் இலாமல் எடுத்தது குடிப்பதற் கூறும்;
வீங்கிள வேனிலில் வெம்மை தணித்திட வாரி
யாங்கிருப் பாரையும் ஈங்கென விளித்திடும் பாரும்.
செடிகொடி மரம்பிற எல்லா உயிர்களும் விடாயில்
மடிவதைத் தடுத்திடக் கிடைத்திட வேண்டுமிந் நீராம்;
ஒடிவதும் இலாத இகநா கரிகமும் நிலையாய்
நடைபெறத் தருவதும் பிறவல அதுதனி நீரே.
தமிழ்தரு மாநிலம் கருநடம் இவற்றிடை மாறாய்க்
குமிழ்தரு துயரமும் பிறவல அதுவுயிர் நீராம்;
இமிழ்தரு கடல்கடந் துளமலை நாட்டொடு சிங்கை
நிமிர்பெறு தனித்துயர் எதுவெனின் அதுவிலை நீரே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.