திறத்தினொரு மலைச்சுனையாய் தேர்ந்தமகாத் தீரை
தேசமக்கள் கொணர்ந்தமர்த்த தீரபுத்தி கொண்டார்;
மறைத்துவைத்த பணமனைத்தும் விளைத்தபயிர் போல
மகாத்தீரும் வெளிக்கொணர்வார் குடிகளிது சொன்னார்.
நிறைத்துயர்ந்த நேர்மையுள்ள அரசினதி காரி
நிமிரறிஞர் பலரதனில் குமிந்துழைப்ப தாலே
தரத்துயர்ந்த நடவடிக்கை இனி நலமே செல்லும்
தரணியிலே தொலைந்தபணம் உடன்பெறவே கிட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.