Pages

சனி, 5 மே, 2018

தேர்தல் முடிவுகள் கேட்கும் மனக்கிளர்ச்சி.

தேர்தலிலே வெற்றிஎந்தப் பக்கம் என்று
வேர்த்திடவே கூடியங்கு வீற்றி  ருந்து

சார்தலின்றிச் சாய்வின்றித் தொலைநற் காட்சி
சாற்றுகிற முடிவுகண்டு  சடைதல் இன்றி

ஓர்தலுடன் கருத்துரைகள் ஊறக் கேட்டார்
ஓய்வினையும் மறந்தவராய் ஆயும் மக்கள்;

தீர்தலுண்டே உளக்கிளர்ச்சி  !குடிநல் லாட்சி
தேர்ந்திடவே நேர்ந்திடுமே ! தேசத்  தோர்க்கே.


பொருள்:

 சார்தல் - கட்சிச்சார்பு.
 சாய்தல் - ஒருதலைச் சாய்வு
சடைதல் -  சோர்வு

குடியாட்சியில் தேர்தல் முதன்மை வாய்ந்தது.
அறிவிப்புகள் வெளியாகும்போது என்னே குதூகலிப்பு.
இத்தகைய மன இணைப்புகள்தாம் குடியாட்சியைச்
செழிக்கச்செய்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.