Pages

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தமிழுடன் மொழிகள் பிற ஒப்பாய்வு

நாம் தமிழில் வாக்கியங்களை எழுதும்போது

இரண்டிரண்டு சொற்களாகக் கவனித்து வரைய

வேண்டுமென்பது இலக்கணியர் நமக்குக்

கூறும் ஆலோசனை. இந்த ஆலோசனை

எந்த இலக்கண நூலில் இருக்கிறது என்று

நீங்கள் கேட்கவேண்டும். கேட்டால் அதற்குப்

பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏதும்

இல்லை என்பதுபோல் பலர் நடந்து

கொண்டாலும் யாமதை முன்மையாகக்

கொண்டு பதிலுரைப்போம் என்பது நீங்கள்

அறிந்ததே.



நாம் இப்போது எழுதிக்கொண்டிருக்கும்

சொல் நிலைமொழி என்றனர். மொழி என்பது

இங்கு தமிழ் ஆங்கிலம் போன்ற மொழிகளை

குறிக்கவில்ல. அது சொல்லைக் குறிக்கிறது.

ஆகவே எழுதிக்கொண்டிருப்பது : நிற்கும் சொல்

நிலைச்சொல்; அல்லது முன்னோர் கூறியபடி

நிலைமொழி. நிலைமொழிக்கு அடுத்து வருவது

வருமொழி. அதாவது வருஞ்சொல். ஆகவே  

இரண்டிரண்டு சொற்களாகக் கவனித்து

சந்தி நோக்கி எழுதுதல் வேண்டுமென்பது

மறைமுக விதியாகும்.




சீனமொழிபோல் நம் மொழியில் சொற்கள்

தனித்தனியாக நிற்பதில்லை. வ்வா பா என்று

சீனத்தில் சொன்னால் அதை வாப்பா என்று எழுதவோ

பேசவோ மாட்டார்கள். ப் என்ற மெய் இடையில்

தோன்றாமலே பேச்வேண்டும். உச்சரிப்பதில்

அவர்களுக்கு மென்மைதழுவுதல் முக்கியம்

ஆகும். தமிழிலோ பகர ஒற்றுத் தோன்றும்படி

யாகவே சொல்வது மரபு. இங்கனம் மொழிகள்

மரபில் வேறுபடுகின்றன. மலாய் மொழியில்

தாரி என்றால் நடனம். நடனம் செய் என்று சொல்ல்

ஒரு முன்னொட்டு கூட்டப்படுகிறது. ம- என்பது

அதுவாகும். -ம, தாரி என்பன சேர மனாரி என்று

புணர்ந்து புதிய சொல் உருவாகிவிடும்,. ம+தாரி =

மந்தாரி என்று வருவதில்லை. இதில் கவனிக்க

வேண்டியது: தாரி என்ற சொல்லின் முதலெழுத்து

தா என்பது, நா என்று மாறிவிடுகிறது. சில

மொழிகளில் த-வுக்கும் ந-வுக்கும் நெருங்கிய

உறவிருப்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த

மாதிரியான புணர்ச்சி விதிகள் முன்னொட்டுகட்கும்

அவற்றின் பின்வரவாம் முழுச்சொற்களுக்கும்

இடையிலானவை ஆகும். முன்னொட்டுக்கள்

அல்லாதன புணர்கையில் இயல்பாக ஒலிக்கும்.

எழுத்துக்கள் மாறமாட்டா. தோன்றவும் மாட்டா.



எனவே புணர்ச்சியின் மூலம் வரும் கடின

ஒலிகளை மலாய் தவிர்த்துவிடுகிறது.

ஆனால் சமத்கிருதத்தில் தமிழில் போல

சந்தி இருப்பது தமிழின் வழியைப் பின்பற்றிய

மொழி அது என்பதைத் தெளிவாக்குகிறது.



அதன் இலக்கணத்தை எழுதிய பாணனாகிய

பாணினியும் தமிழ் ஈர்ப்பின் வயப்பட்டிருந்தான்

என்பது மிகையன்று. இப்படிச் சந்தி இலக்கணத்தை

அமைத்ததன்வழி அவன் சமத்கிருதத்தைக்

கடினப்படுத்தி, வடக்கிலிருந்தோருக்குத்

தொல்லை விளைத்து, புத்தர் முதல் குரு நானக்கின்

பின்னோர் வரை அதனை அணைத்துக்கொள்ளாமல்

அடுத்திருத்தி வைத்திருக்கும்படி செய்துவிட்டான்

என்றே தோன்றுகிறது. முழுப்பளுவையும்

பாணனாம் பாணினிமேல் சுமத்துவது இரங்குதல்

இன்மை எனக் கருதலாகாது. தமிழிற் பின்னாளில்

சொற்கள் நீட்சி பெற்றமாதிரியே சமத்கிருதத்திலும்

மிக நீண்டன என்றறிதல் வேண்டும். 
 
தொடர்ந்து வேறோர் இடுகையில் நேரம் கனியும்போது
 
தொடருவோம்.
 
 
திருத்தங்கள் பின்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.