பூமி பற்றிய சொற்கள்.
பூமிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்: ஒரு தொகுப்பு:-
பூத்தல்: தோன்றுதல்.
பூ+ ம் + இ = பூமி.
பல உயிர்களும் தாவரங்களும் ( நிலைத்திணை உயிரிகளும்)
தோன்றுமிடம். அல்லது இறையருளால் தோன்றிய ஓர் இடம்
அல்லது கோள்.
தருதல் : கொடுத்தல்.
தரு+ அணி > தார்+அணி = தாரணி.
தரு என்பது தார் என்று திரியும். தரு> தார் ( தாராயோ என்ற
வினைமுற்றை நோக்கின் புரியும்.)
தாரணி > தரணி. இது முதனிலை குறுகிய சொல்.
தரணி > தரு+ அணி > தர்+ அணி > தரணி.
இதில் உகரம் கெட்டது.
தருதல்: தரை.
தரு+ஐ = தரை.
இது பல மொழிகளிலும் பரவிய தமிழ்ச்சொல். டெரா என்று
இலத்தீன் மொழிக்கும் சென்றது நம் பெருமைக்கு¡¢யதே.
தமிழ் பல மொழிகட்கும் சொல்வளம் தந்துள்ளது.
இடம்:
எதை எங்கு இடுகிறோமோ அது அங்கு இடம் கொள்கிறது.
இடு+அம் = இடம்.
இடு> இடை.
இடு >இடுக்கு. (கு - விகுதி).
மேல் இருக்கும் இடம்:
மே+து + இன் + இ.
மேல் (தன்மேல்) உயிர்கள் தாவரங்கள் இவற்றை உடைய (து
) ஆகிய இடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.