பந்துவிளை யாடப்போய்
பையனோ பாவம்
படுக்கையில் விழுந்தான்
கையொடிந்தே!
வெந்துகÚத் திட்டதோல்
வேண்டாத வேர்வை
வினையிடைப் படுதல் மெய்வருத்தம்;
நொந்துபுவி மேலும்நீ
கைவரப் பெற்றாய்
நோவன்றிப் பிறிதிங் கில்லையன்றோ
இந்தநலம் யாமுரைத் தேமலோ காணா(து)
இன்றுதுன் புறுதல் நடைபெற்றதே.
பந்து விளையாட்டு ஆசையினால் கை எலும்புமுறிந்த
பையனுக்கு யாம் முன் கூறிய ஆலோசனையும்
இன்று அவன் நிலையும்.
குறிப்புரை:
குறிப்புரை:
நொந்துபுவி மேலும்நீ
கைவரப் பெற்றாய் நோவன்றிப்
பிறிதிங் கில்லையன்றோ : இதை இப்படி உரைநடைப்
பாணியில் மாற்றிப் படித்துப் பொருள்கொள்க:
மேலும், நீ புவி இங்கு நொந்து
நோவன்றிப் பிறிது கைவரப் பெற்றாய் இல்லை.
நொந்து = மனம் நொந்து; நோவு அன்றி - வலி முதலியன
அல்லாமல். பிறிது - வேறு.
உரைத்தேம் அலோ : உரைத்தோம் அல்லவோ.
காணாது - நீ கண்டுகொள்ளாமையினால்.
பிறிதிங் கில்லையன்றோ : இதை இப்படி உரைநடைப்
பாணியில் மாற்றிப் படித்துப் பொருள்கொள்க:
மேலும், நீ புவி இங்கு நொந்து
நோவன்றிப் பிறிது கைவரப் பெற்றாய் இல்லை.
நொந்து = மனம் நொந்து; நோவு அன்றி - வலி முதலியன
அல்லாமல். பிறிது - வேறு.
உரைத்தேம் அலோ : உரைத்தோம் அல்லவோ.
காணாது - நீ கண்டுகொள்ளாமையினால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.