ஆலோசனை என்பது ஆய்வுசெய்து ஆனந்தமடையத்
தக்க சொல்.
ஆல மரம் தமிழர் வாழ்வில் ஒரு சிறந்த
இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள மரமாகும். முழுமுதற்
கடவுளான சிவபெருமானும் ஆல் அமர் கடவுள் (ஆலமர்
கடவுள்) என்று சிறப்பிக்கப்படுவோன் ஆவன். சிவ என்பது செம்மை குறிப்பது. செம்மை என்பது ஒரே பொழுதில் சிவப்பாகிய நிறத்தினையும் நேர்மையாகிய
குணத்தினையும் குறிக்கவல்ல சொல்லாம் என்பது நீங்கள் அறிந்ததே ஆகும்.
பல பெருங்கோயில்களின் தொடக்கம் மர நிழலில்
அமைந்தது என்பது வரலாறு கூறும். முருகப் பெருமான் கோயிலாகிய மலேசியாவின் மரத்தாண்டவர்
ஆலயம் ஒரு மரத்தடியில் அருள்பாலித்த கடவுட்கு எழுந்த புண்ணியத் தலமாகும். இன்று அது
பெருந்தலமாய்க் காட்சிதருதல் மகிழினிய நிகழ்வினதாகும். சென்று ஆங்கு வணங்கி யாம்பெற்ற
இன்பம் பெறுக இவ்வையகம். சிவம் வேறு முருகன்
வேறு அல்லவென்பது அருணகிரியார் அருள்மொழியாகும்.
இத்தகு ஆலமரத்தடியில் அமர்ந்தே பண்டை
மக்கள் சிந்தனைகளில் ஈடுபட்டனர். இந்தப் பண்டை
நிகழ்வையே ஆலோசனை என்ற சொல் இன்றும் காட்டுகிறது.
ஆலடியில் ஓய்ந்து சிந்திக்க. ஓய்தல் = சிந்தித்தல். ஆய்ந்து ஓய்ந்து சிந்தித்து என்ற தொடரையும் கருத்தில்
கொள்க.
ஓய்தல் . வினைச்சொல்.
ஓய்+ அன் + ஐ =
ஓயனை.
ஓயனை > ஓசனை > யோசனை.
யகர => சகரத் திரிபு. ஒ.நோ: வாயில்
- வாசல்.
நேயம் > நேசம். தோயை > தோசை. காய்>
காய > காச நோய். ( உடல் காயும் நோய்). வேய் > வேயி > வேசி. எனப்பலப்பலவாம்.
காய (காய்தல்) எச்சவினை, உடல் காய்ச்சலையும் இளைத்தலையும் ஒருங்கு குறிக்கவல்ல குறியீடாகிறது என்பது காண்க. காய்ந்தது சுருங்கும்.
அகர வருக்கம் யகர வருக்கமாம். ஆனை = யானை.
ஆலமரத்தடியில் யோசனை நிகழ்த்துதலே ஆலோசனையாகும்.
ஆல் யோசனையே ஆலோசனை. முன்மைச்சொல் ஓசனை. மரம்: ஆல்.
அறிந்து மகிழ்வீர்.
This document may have some unwanted
autocorrect errors and dots self-generated after posting. This can only be
corrected after a lapse of time after the activity becomes “spent”. Regrets.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.