வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற
பழமொழியில் ஆயுதம் என்ற சொல் நன்`கு பதிவு பெற்றுள்ளது. தண்டாயுதம் ( இப்போது தெண்டாயுதம்) என்ற சொல்லிலும்
ஆயுதம் ஆட்சிசெலுத்துகிறது. ஆயுதம் தாங்கிய
கொள்ளைக் காரர்கள் என்னுங்கால் ஆயுதம் அங்கு வந்துவிடுகிறது.
ஒன்றை ஆய்வதற்கு அல்லது ஆய்வு செய்வதற்கு
ஆயுதம் தேவைப்படுகிறது. கீரை ஆய்வதற்குக் கைகளே ஆயுதம். ஆய்தல்:
ஆய்+உது + அம் என்ற பிரிப்பில் இதனமைப்பைக் கண்டுகொளக. உது = முன்னிருப்பது. முன்னிருப்பதை ஆயும் கருவியே ஆயுதமாகும்.
ஆயுதம் என்பதற்கு வேறு தமிழ்ச் சொற்கள்
உள்ளனவா? தேடிப்பாருங்கள்.
கூர்த்திகை என்ற சொல் ஓர் இரண்டு நூற்றாண்டுகட்கு
முன்னர் தமிழில் வழங்கியதென்று தெரிகிறது. பெரும்பாலான ஆயுதங்கள் முன்பகுதி கூரானவை. ஆகவே கூர்த்திகை என்பது நன்`கு
அமைந்த பெயர். பிற்காலத்தில் கூர்மை இல்லாதவையும் கூர்த்திகை என்று குறிக்கப்படவே, அதன் சொல்லமைப்புப் பொருள் நழுவிற்று.
கூர்த்திகை என்ற சொல்லை வைத்து வாக்கியம்
எழுதுங்கள். அப்போதுதான் அச்சொல் மறைந்திடாமல்
இருக்கும்.
ஆயுதம் என்பதை "வனைகலன்" எனலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.