சட்டை என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
பாம்பின் தோலுக்கு மேல் இருப்பது அதன்
சட்டை. புதிய தோல் தயார் ஆனபின் பழைய தோலை அது கழற்றிப் போட்டுவிடுமென்கிறார்கள்.
உள்தோலை அடுத்திருப்பதே அதன் மேற்றோல்
ஆகும். அடுத்திருப்பதனால் அடு > சடு > சட்டை ஆயிற்று, சட்டை என்பதில் இறுதி ஐ என்பது விகுதி.
சடு+ ஐ = சட்டை,
பிற்காலத்தில் இது மேனிப் போர்த்துறையையும்
குறிக்கலாயிற்று,
இதைச் சுருக்கி மேனியுறை எனலாம்.
அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகும். ஆடி >சாடி.
அடு> சடு > சட்டி.
அடுதல் = சமைத்தல்.
சட்டை பின் பிறமொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுவதானது
நம் சொல்லின் திறமாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு: ஒரு சொல்லில் கூடுதலான புள்ளிகள் இருந்தன. ஆக்குரையைக் ( compose draft ) காண்கையில் அதில் இதைக் கண்டுபிடிக்க இயல்வில்லை. 15102022 04.38
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.