தமிழில் கவ்வுதல் என்றால்
அகப்படுத்துதல், வாயினால் பற்றிக்கொள்ளுதல்.
கவ்வு என்பது வினைப்பகுதி,. மேலிருந்து
ஒரு பொருளை மூடிக்கொள்ளுதலுக்குக் கவித்தல் எனப்படும்.
ஏதேனும் ஒரு பொருளை உட்படுத்தி,
அதன்மேல் வரணனைகளையும் கருத்துகளையும் கொண்டு மூடினால் அல்லது போர்த்திவைத்தால், அப்பொருளைக்
கவித்துவைத்தோம் எனலாம்.
நிலவே நிலவே ஓடிவா என்றால்
நிலவு என்ற பொருளின் மேல் வருதலாகிய கருத்தினைக் கவித்தும் குவித்தும் மேல்விரித்து உட்பொதிந்தும்
வைக்கிறோம் என்று பொருள்.
இப்படிக் கவித்தலைத்தான்
கவி என்கிறோம். கவி > கவிதை. இங்கு தை என்பது
விகுதி.
தை என்பது பொதுவாக ஒரு விகுதி. வினைப்பகுதியையும் பிற சொற்களையும் சென்றிணைந்து புதிய சொல்லை அமைக்கும்.
தை என்பது பொதுவாக ஒரு விகுதி. வினைப்பகுதியையும் பிற சொற்களையும் சென்றிணைந்து புதிய சொல்லை அமைக்கும்.
கவ்வுதல், கவித்தல் தொடங்கிக்
கவடு (கபடு) உட்படப் பல கருத்து விரிவுகளை உள்ளடக்கிப் புதிய சொற்களை மொழிக்கு ஈந்தது
கவ்~ என்ற அடிச்சொல். திறன்மிக்க இவ்வடி பிறமொழிகளையும்
வளப்படுத்தியது, நெல்லுக்கு ஓடியது புல்லுக்கும் ஊட்டம் தந்ததுபோலாம், இது பிற ஆதாரங்களுடன்
கூடி நின்று தமிழின் தொன்மையை விளக்கவல்லது.
கவை முதலிய சொற்கள் தமிழில்
உள. அவற்றை ஈண்டு விரிக்கவில்லை.
இனிச் சொல்லமைப்பினைக்
கவனிப்போம்.
கவி > கவிதல்
கவி > கவித்தல்.
கவி > கவிதை.
பொருளின்மேல் அழகு கவித்தல்;
சிந்தனை கவித்தல். எண்ணங்களை விரித்து அடக்குதல். வார்த்தைகளைப் போர்த்தி மூடுதல்.
தை விகுதிச் சொற்கள். காழ் > கழுதை; பழ > பழுதை. வன > வனிதை. புன்> புனிதை ( புனலால் தூய்மை பெற்றவள்); (புன்>புனல்) . தேவு > தேவதை; அகம் > அகந்தை.
இவை மொழியிற் பலவாம்.
ஒரு பொருண்மேல் மனம் கவிந்து சொற்கள் இயைந்து வெளிப்படுதல் - கவிதை. கவி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.
கவிதை, பாக்கள் சிறந்த
மொழி தமிழ். கவிதைச்சொல் பிறமொழிகளிலும்
சென்று
வழங்கியது தமிழிற்குப் பெருமை ஆகும்.
இதை இன்னொரு முறை வேறு கோணத்தினின்று காட்டுவோம், வாய்ப்புக் கிட்டுகையில்.
will edit. Some dots have appeared in unwanted places
These will be later corrected.
will edit. Some dots have appeared in unwanted places
These will be later corrected.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.