Pages

ஞாயிறு, 19 நவம்பர், 2017

கருமைக் கண்ணன், நீல நிறமா?



            

கண்ணன்பற்றிய பாடல்கள் மூலம் நாம் அறிவது அவன் கருப்பு நிறம் என்றும் நீல நிறமென்றும் பேதமுறும்படியாக வரணிக்கப்படுதலே. மொழியில் அவனை வரணிப்பதில் ஏற்படும் இந்தக் குழப்படியைத் தீர்ப்பதற்கு அவனை மேகவண்ணன், முகிலன், கடல் வண்ணன் என்று வேறுபட்டு விரித்துரை செய்யலாம்.

ஆனால் தொன்றுதொட்டு இந்தியர்களிடையே நீலத்துக்கும் கருப்புக்கும் பொருள்கொள்வதில் எடுத்துரைக்கத்தக்க வேறுபாடுகள் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் யாது?

நீலம் என்பது துணி முதலிய பொருட்களில் நீங்காத கருப்புக் கறையையே குறித்தது. இதை மாறாது நிற்பது எனப் பொருள்படும் சொல்லால் குறிப்பதுண்டு.

நீலம் என்ற சொல்லின் அமைப்பைக் காண்போம்.

நீலம் நில் என்ற சொல்லிற் பிறந்ததாகும்.

நில்+ அம் > நீலம்.  (நிற்கும் நிறம்) (-மாறாத கறை)

முதனிலை திரிந்து (  நீண்டு)  அம் விகுதி பெற்றது.

பொருள்: நிற்பதான கருங்கறை.  இதனால் நீலம் என்பது கருப்பு என்றும் பொருள்படும்.

துணிக்கு நீலம்போடுதல் என்ற வழக்கும் காண்க.

முதனிலை நீண்டு அமைந்த வேறு சொற்கள்:
படி + அம் = பாடம்.
சுடு + அம் = சூடம்.
நடி + அகம் = நாடகம்.

இன்னும் இத்தகைய சொற்களுக்கு, எம் முன் இடுகைகள் காண்க.

கறு> கறை.   கறு > கறுப்பு.  கரு= கறு. கருப்பு=கறுப்பு.

நீலம்:  வானும் கடலும் நீலம்.  இவை ஒளியற்று இருப்பதால் கருமையாய் 
அல்லது நீலமாய் உள்ளன. நீலம், கருப்பு என்பன நிற்பவை. ஒளி வந்துகொண்டும் போய்க்கொண்டும் உள்ளது. சூரியன் எழுகிறது; ஒளி வீசுகிறது; பின் மறைகிறது. ஒளி பொய்த்துவிடுகிறது. எனவே அடிப்படை என்பது இருள்தான்.  ஆகவே இருப்பதும் நிற்பதும் இருள்தான்.  எனவே  நில் > நீலம் என்பது எப்படிப் பார்த்தாலும் பொருத்தமான அமைப்பு. 

மாறாத நிறம் நீலம்.  இர் என்பது தமிழில் இருளின் அடிச்சொல். அது இருத்தல் என்பதன் அடிச்சொல்லுமாகும்.

இர் :

இர் > இரு > இருத்தல் ( உள்ளதாகுதல் )
இர் > இருட்டு ;  இருள்; இரவு: இராத்திரி; இரா.

Tamil etymology makes it clear. Light is something that is superimposed on darkness.

External evidence:

Even the bible recognised it;  in the beginning there was darkness; God said let there be light.  Then came the light;

So light is a subsequent event.
 
இருள் நிறம்:  விண்ணு.  விஷ்ணு.  விண்.
ஒளி நிறம்:   சிவம். செம்மை.
நிறம் என்ற சொல்லும் நிறு என்பதனடிப் பிறந்த சொல்.
நில் > நிறு.
நnகு சிந்தித்து அறிந்து மகிழ்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.