தோழனுக்குப் பல மாற்றுச் சொற்கள் தமிழில் கிடைக்கும். எடுத்துக்காட்டு: நண்பன். கூட்டாளி.
உங்கள் அகத்தில் சார்ந்திருப்பவன் உங்கள் நண்பன். உங்கள் மனம் அவனை விரும்புகிறது.
அதனாலே அவன் உங்கள் தோழனானான்.
ஓர் இல்லத்தரசியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கணவர், இவர் சொல்வதைக்
கொஞ்சமும் கேட்க மாட்டாராம். “ உன்னைவிட நான்
என் தோழனையே விரும்புகிறேன்” என்பாராம். தோழன் வாங்கிய கடன் வெள்ளி ஐம்பதினாயிரத்துக்கு
இவர் வங்கியிடம் பிணையாக நின்றார். சில மாதங்களில் தோழன் கடன் தவணைகளைக் கட்டமுடியாமல்
திணறி, இறுதியில் நொடித்துப்போய் வேலையும் இழந்துவிட்டதால், வங்கி இவரைப் பின் தொடர்ந்தது. இவரும் கொஞ்சம் தவணைகளைக் கட்டிப்பார்த்தார். இவரும் வேலையிழக்க, வழக்கு நடைபெற்றது. எல்லாக் கடனையும் இவரே கட்டவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்புவழங்க, இவர் அதிர்ந்துபோனார்.
இதற்கிடையில் இவரது தோழன் கொஞ்சம் பணம் சம்பாதித்தாரென்றாலும்
கடனைத் தம்மால் கட்ட முடியாது என்று கைவிரித்துவிட்டார். இப்போது இந்த இல்லத்தரசிதான் கடனைச் சமாளித்துக்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார்
என்று தெரிகிறது. இங்கு கூறப்பட்ட நபர் தோழனை மிகவும் விரும்பி மண்ணாய்ப் போனவர். இது எதைக் காட்டுகிறது என்றால், தோழன் என்போன் ஒருவனின் அகத்தைச் சார்ந்து நிற்பவன்.
அகம் என்பது மனம். எனவே “சார் அகன் “ என்ற சொற்புனைவு சிறப்பானது. தோழனுக்குச் “சாரகன்” நல்ல மாற்றுச் சொல் என்பதை
இதன்மூலம் உணரலாம்.
குதிரைப்பாகன் குதிரையைச் சார்ந்திருப்பவன். இச்சொல் அவனுக்கும் வழங்கும்.
(திருத்தம் வேண்டின் - பின்பு. )
அறிக மகிழ்க.
சிலதிருத்தங்கள் : 25012022 1715
மற்பார்வை பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.