ஐயப்பனைத் தொழுதல்.
வேண்டியதோர் நன்மைக்கே
எந்த நாளும்
விழுந்துவணங் கிடுவீரே ஐயன் தாளில்;
ஆண்டிமுதல் அரசன்வரை
ஆர்க்கும் நெஞ்சை
அள்ளித் தருவோன் என்னில்
ஐயன் தானே!
தீண்டுவதும் அனைத்தும்
பொன் காண்டல் உண்மை;
தேடுவதும் ஓடிவரும் திகைந்த நாளில்;
மீண்டுவரு பிறவிகளை மெல்லப்
போக்க
மேன்மைதரு மேலுலகும்
வாய்க்கும் இன்றே.
தாளில் - கால்களில்;
காண்டல் - காணுதல்.
பொன் காண்டல்: பொன்னாகக் காணுதல்.
ஆர்க்கும் - யார்க்கும்.
திகைந்த - உறுதிசெய்த;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.