தெலுங்கும் வடுகும்
தென் என்பது அடிச்சொல்.
இது தெல் என்றும் தோன்றுதல் உடையது.
தென் + கு = தெற்கு.
இங்கு கு என்பது விகுதி.
தெல் + கு = தெற்கு,
தெல் > தெலுகு.
இம் மொழிப்பெயரில் கு
என்பது விகுதியே. உகரச்
சாரியை பெற்றது.
தெல் + உ + கு= தெலுகு.
இச்சொல் ஒரு ஙகர ஒற்று
மிக்கும் அமையும்.
தெலுகு > தெலுங்கு.
இதன் பொருள்: தென்மொழி
என்பது.
அறிஞர் சிலர் தேன் என்ற
சொல்லே குறுகி, தென் என நின்று, கு விகுதி
ஏற்று தெனுகு என்றாகி, தெலுகு, தெலுங்கு என்று திரிந்தது என்பர்.
வடக்கு என்ற சொல்லில் வட என்பது பகுதி.
வட > வடக்கு.
வட > வாடை. (வடக்குக் காற்று).
இது நாற்றம் குறிப்பது
பிற்கால வழக்கில்.
வடு > வடுகு. (வடக்கு மொழி).
வடு > வட.
வட என்பது எச்ச உருவிலிருப்பதால்,
வடு என்பதே
பகுதியாகும்.
வடு என்ற சொல் எப்படித்
தோன்றியது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.