Pages

செவ்வாய், 31 அக்டோபர், 2017

பொருள்சேவை வரியும் எதிர்க்கட்சிகளும்!




ஒரு சிந்தனை

விலைகள் ஏறுவதும் இறங்குவதும் இயல்பாதே. அவை ஏறுவதற்கு வரியொன்றே காரணம் என்று முடிவுசெய்வது எப்படி? குறிப்பிட்ட பொருள் வரத்துக் குறைந்தாலும் விலை ஏறுவது எங்கும் காணக்கூடியதே.  அதனால் பலர் வேலையில்லாமல் போனார்கள் என்று கட்சிக்காரர்கள் சிலர் சொல்வது எப்படி நடந்தது என்று தெளிவு கிட்டில்லை.

ஒருவேளை வரிவிதிப்பினால் குறிப்பிட்டவர்கள் விற்கும் பொருள்களை யாரும் வாங்கவில்லை, அதனால் விற்பவர்கள் வேலையிழந்தனர் எங்கிறார்களோ? வரி விதித்தாலும் விதிக்கவிட்டாலும் வேண்டியபொருளைத் தேவைப்படுகிறவர்கள் வாங்கத்தான் செய்வர்.

ரொட்டிக்குப் பத்துக்காசு வரிகூடிவிட்டால் அதை உண்ணாமல் நிறுத்திவிடுவோமா என்ன? அதை வாங்கித்தான் ஆகவேண்டும்.
வரியே கட்டாமல் ஒரு  நாட்டினர் இருந்துவிடமுடியுமா?  நாட்டில் செய்யவேண்டிய வேலைகளையும் இன்னும் தற்காப்பு முதலியவற்றுக்கும்  பணம் தேவையாயிற்றே! தற்காப்புக்காக ஓர்  எறிபடையை உருவாக்குவதற்கு மில்லியன் கணக்கில் செலவிடவேண்டியுள்ளதே!

பொருள்சேவை வரிவிதிப்பின்போது வேறுபல வரிகள் இரத்துச் செய்யப்பட்டன என்று கேள்விப்படுகிறோமே! குறைகூறுவோர் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை போல் தெரிகிறதே…

ஓர் அரசு வரிவிதிக்கும்போது அதை எதிர்த்துப் புகழ் பெற வேண்டுமென்று ாரும் நினைக்கலாம். அதற்காகப் பொருளில்லாப் புதிர்களைக் கட்டவிழ்த்துவிட்டால் – ஒருவேளை படிப்பறிவில்லாத மக்கள் நம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

கட்சிக்காரர்கள் தெளிவான எதிர்ப்புகள் எதையும் முன்வைக்கவில்லை.

(இங்குக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. 2.11.2017.)


The English text editor and connected auto correct feature gets confuseð  between Or (English)  and Or (Tamil} which means one. Consequently oru becomes corrected as Or.  If you spot this please inform us.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.