இங்கு கூறப்படும் திரிபுகளைக் கவனமாகக் கணித்தறியுங்கள்.
கன் என்பது ஒரு தமிழ் அடிக்சொல்.
இதிலிருந்து அமைந்த சொற்கள்
சிலவற்றைக் காண்போம்.
கன் - கனல்.
(விகுதி: அல்).
( இது எரியும் நெருப்பிலிருந்து
வீசும் திண்ணிய வெப்பத்தைக் குறிப்பது ).
கன் > கனி.
(போதுமான வெப்பமிருந்தாலே
காய் கனியாகும். குளிர்காலத்தில் பழுப்பவை,
நீண்ட காலத்தை மேவும். எனவே கன் என்பதிலிருந்து
கனி என்ற சொல் அமைந்தது பொருத்தமே.)
கனி > கனிதல். (வினைச்சொல்)
கன் > கன்னுதல். (வெப்பமடைதல்,
அதனால் காய் முதலியவை மாற்றமடைதல்).
கன் > கன்னி.
(போதிய வெப்பம் அடைந்தவள்
).
முதிர்வு வெப்பத்தினோடு தொடர்புடையது என்று எண்ணினர்
என்பது தெரிகிறது.
கன் > கன் து
> கந்து.
கன் > கன் து
> காந்து > காந்தம்.
உள்ளே இழுக்கும் ஆற்றல்
தரும் ஒரு வெப்பம் இருப்பதாக கூறப்படும் இரும்பு.
கன் > கன்றுதல்.
பொருள்: கருகுதல்; உருகுதல் சினத்தல், வாடுதல்.
கந்து > கந்தகம்.
கன் > கன் து
> கந்து > கந்தன்.
( தீ வடிவினன். ஒளி வடிவினன்.)
எரிதவழ் வேலோய் என்றார்
ஒளவையார்.
பிற பின் அறிவோம்.
திருத்தப்பார்வை: பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.