இலக்கம் இரண்டினைம் பத்தா யிரமே
கலக்க மடைந்தவுரோ கிங்க்யர்----நிலமகன்று
ஓடினர்மி யன்மாரி
னின்றும் உயர்வாழ்வு
கூடுமோ கோதில் உலகு.
பொருள்:
இலக்கம்: இலட்சம்; ஐம்பத்தாயிரம் - ஐம்பதினாயிரம்;
உரோகிங்க்யர் - முஸ்லீம் அகதிகள்.
கோதில் - குற்றமில்லாத. உயர்வாழ்வு - இங்கு மறுவாழ்வு
எனக் கொள்க.
பல்வேறு மதத்தினர் வாழ்
நாட்டில், உம்முடன் நானிருக்க மாட்டேன் என்று விலக்கிக்கொள்வது, பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். சமய நல்லிணக்கம் கடைப்பிடித்தல் நன்று. உரோகிங்க்யருக்கு நம் நல்லெண்ணம் உரித்தாகுக.
இந்தியாவின் கிழக்கிலும் உரோகிங்க்யர் பலர் ஊடுருவியுள்ளனர் என்று
அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் இடம் காணப்பபடுதல்
தேவையாகிறது. ஐ.நா அகதிகள் அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். இதற்கான "விடிவு" அங்க்சான்சுய்ச்சி அம்மையாரிடம் உள்ளதாகத் தெரிகிறது. மியன்மார் சென்றுள்ள தலைமையமைச்சர் மோடி மறைவாகப் பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.