Pages

புதன், 30 ஆகஸ்ட், 2017

தமிழ்ச் செய்தித் தாள்கள் --



தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா
டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல் 
செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும் 
யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த் 
தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம் 
செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்  
வாங்கிப் பார்க்க!
மணிக்குடத்துள் யாவினையும் திணிக்கினது 
போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும் 
யாவும் உண்மை 

அரும்பொருள்:

ஆக்கும் செய்தி -  வெளியிடும் செய்தி;
திரக்கிடினும் -  தேடினாலும்;
யாண்டும் - எங்கேயும்
உடைப்பன சேர்த்து ஆக்கம் -  பிரிந்தவற்றைச் சேர்த்து அமைத்தல்;
கடுகி = விரைந்து;
திணிக்கின்  = உள் வைத்தால்;
பன்மை - பலவும் இருத்தல்
மனமகழ்க்கும் -  மனம் அகழ்க்கும்;  மனத்தைத்  தோண்டும்;
செயும் - செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.