எங்கெங்கு நோக்கினும்
சீனியடா -- அதை
எடுக்காமல் வாழ்வோனே
ஞானியடா!--- எதிலும்
தங்கி ஒளிந்திடும்
சீனிதன்னை --- உண்டால்
தாங்காமல் நோய்தாக்கும்
மேனிதன்னை.
ஈரல் இருதயம் கண்களென
--- உனக்
கிருந்திடில் கால்
இவை புண்ணழுகி,
தீரல் இலாவோர்
கோரநடம் --- காட்டித்
தேரா மடுக்குள்
ஊரவிடும்.
சில சொற்களுக்குப் பொருள்:
சில சொற்களுக்குப் பொருள்:
எடுக்காமல்
- உணவில் சேர்க்காமல் ; உட்கொள்ளாமல்.
இருந்திடில்
- வெட்டப்படாமல் இருந்துவிடுமாயின்.
தீரல் = தீர்தல்; முடிதல்.
தேரா - மீண்டுவராத.
மடு = நீர்நிலை; மடுக்குள் = மடுவிற்குள்.
அடுத்து வியாதி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.