(வேறு வேறு சந்தங்களில்)
இனிதாய் நிறைவை
அடைந்து --- அம்மன்
இன்னருள் பெற்றே
மகிழ்ந்தனர்காண்!
கனிதேன் கலந்து
சிறந்து ---- கோவிலில்
கண்டவை யாவும்
ஒளிர்ந்தனகாண்.
***
ஈரா யிரம்பெறும் மாமாலை ----- அணிந்தே
ஏற்ற முடன் திகழ்ந் தாள்அம்மையே
ஆரும் அறியா அழகுடனே
--- அம்மை
அருள்வடி வாகினள்
கேள்உண்மையே.
பிறவி எடுத்தேனே
அம்மனது ---- மனங்கவர்
பேரலங் காரமே கண்ணுறவே.…!
சிறையுள் புகுந்தேன்
அவள்மனமே ---- இனி
விடுதலை என்பதெம்
கைக்கனியே.
தகத்தக என்னும்நல்
தாலிதனை --- அணிந்து
தன்னே ரிலாதொரு
காட்சிதந்தாள்;
மிகத்தரு புன்னகை
கண்டயர்ந்தேன் ----- இக்கவின்
இகத்தினில்
காணவும் உண்டென்பையோ ?
அச்சுப்பிழைகள் திருத்தப்பட்டன. 2300 15082017
அச்சுப்பிழைகள் திருத்தப்பட்டன. 2300 15082017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.