அஞ்சலி
இந்தச் சொல்லுக்கு 2010 வாக்கில் ஒரு விளக்கம் தந்து இது ஒரு தமிழ்/திராவிடச் சொல் என்று அதை அணிசெய்திருந்தோம். அந்த இடுகை
கள்ள ஒட்டுமெல்லியால் ( .an unauthorised browser add-on ) இல்லாததாயிற்று. அதைப் படித்த சிலருக்கு இன்னும் நினைவிலிருக்கலாம். தமிழறிந்தோர் நிரம்ப உளராதலின் அது தொலைந்துவிட்டாலும் அவ்விளக்கத்தினை மறந்திருக்கமாட்டார்கள்.
இவைபோன்ற சொற்களுக்கு நாமளிக்கும் விளக்கங்களை எங்காவது உங்கள்
கணினியின் மூலைமுடுக்கில் சேமித்து வைத்திருங்கள். சொற்பொருளை நன்குணர இவை உதவும். எல்லாமும் இல்லையாயின் எல்லையிலா இருளன்றோ நிலவும்!!
-
இச்சொல்லின் முன் நிற்கும் சொல் அகமென்பது. இது அம் என்று குறுகுதலை
உடையது. தமிழைத் தேர்வுக்காகப் படிக்காமல் ஆர்வுக்காக அலசியவர்கள்
இதை எளிதில் மறத்தலிலர். அகம்+கை என்பது அகங்கை > அங்கை என்று
மாறும். அகத்துக்காரி ஆத்துக்காரி என்று மாறுதலுணர்ந்தோர் இதை அதிசயித்து நோக்கார். அகம் > அம்.
செல்லுதல் > செல் > செலி. ஆக, ஒருவனது அகம் செல்லுதலே அஞ்சலி
செயதலாம்.
பாத+ அஞ்சலி = பத + அஞ்சலி > பதஞ்சலி என்பது அறிக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.