Pages

புதன், 10 மே, 2017

புறக் குலைவு ( remote interference )

போலிக்கடவுச் சொற்களைக் கொண்டு எந்த இணைய
வலைப்பூவிலும் நுழைந்துவிடலாம்.  இப்படி வெளியாரின்
உள்நுழைவு இருப்பதாகத் தென்பட்டதால், நாம் கடவுச்
 சொற்களை மாற்றியுள்ளோம் ,.

முட்டை என்றும் நாம் எழுதியதை மூட்டை என்று
 மாற்றிவிட்டாலே நாம் எழுதுவது  பொருளற்றதாகிவிடும்.
இதைத் தடுப்பதற்காகப் , பணம் செலவிட்டு மென்பொருள்
வாங்கிப் பயன்படுத்தினோம். இரண்டு ஆண்டுகள்
 ஓடவேண்டியது ஒரு மூன்று மாதங்கள் கூட
ஓடவில்லை.அதையும் ஓர் உலாவியையும் புறக் கலைப்பு
 ( remote interference ) மூலமாகக் கெடுத்துவிட்டார்கள். நச்சுமென்பொருள் தடைக்கருவியும் உலாவியும் ஓடாமற் கிடக்கின்றன.
 இனிமேல்தான் அவற்றைச் சரி செய்யவேண்டும்.

நாம் மாடு என்று எழுதியதை அவர்கள் ஆடு என்று
மாற்றிவிட்டால் உங்களுக்கு ஏன் தவறாக இருக்கிறது
என்பது தெரியப்போவதில்லை.

ஏதேனும் தவறுகள் தென்பட்டால், அவற்றைத்தெ
ரியப்படுத்துங்கள். ஒரு, ஓர் மற்றும் ஆங்கில or
என்பவற்றிடையே தன்திருத்த மென்\பொருள் நாம்
விழையாத மாற்றங்களைச் செய்துவிடுகிறது. யாம் என்ன
அனுப்பினோம் என்பது யாம் அறிவோம். பகர்ப்புகள்
உள்ளன.ஆனால் அது உங்களைச் சென்று சேருமுன்
 எத்தகைய‌ மாற்றங்களுக்கு உட்பட்டுவிடும்படி
 செய்யப்படுகிறதென்பதை யாம் அறிய வழியில்லை.


மறைமுக எதிர்ப்புகள் இருக்கையில், இவற்றைத் தாண்டி
 வெல்லுதல் என்பது கொஞ்சம் கடினம்தான். ஒரு  சமயம்
 தமிழறிஞர் ஒருவர் நூலெழுதினார். தாம் எழுதியதன்
 மூலம் பல குழப்பங்கட்குத் தீர்வு ஏற்படுமென்று அவர்
 நம்பினார்.  அவர் நூலை, ஓர் அச்சகத்தவர் விலைக்கு
 வாங்கிக்கொண்டார். ஒப்பந்தத்தில் வெளியிடும் உரிமை
முழுவதும் அச்சகத்தவருடையது. எழுதியவருக்குப் பணம்
 மட்டும்தான் என்பது தெளிவாக இருந்தது. நூலை
 வாங்கியவர் பின்னர் வெளியிடவே இல்லை. பணம்
 கிட்டியதேதவிர, நூலை வெளியிட்டு உலகைக்
கலக்கிவிடலாம் என்று எண்ணிய தமிழறிஞர் வீழ்ச்சி
 அடைந்ததே மிச்சமானது. இப்படி, குலைவு செய்வோர்,
சில வேளைகளில் எந்த விலையும் கொடுக்கத் தயாராய்
 இருப்பார்கள். அவர்களை நாம் வெல்வது கடினமே.

(பு றத்திருந்து  விளைத்த  குலைவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.