ஒத் தொலி ச் சொற்கள்
பைகளை ஒன்றாகக் கட்டிவைத்தால் அதைப் "பைக்கட்டு" எனலாம். அல்லது சாமான்கள் பைக்குள்ளிட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் "பைக்கட்டு" என்ற சொல் அதைக் குறிக்கப் பயன்படுவதில் தவறில்லை.
ஆனால் இச்சொல் "பாக்கட்" packet என்பதனுடன் ஒலியொருமை கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மற்றும் "பை" என்ற சொல்லுடன் "பாக்" என்ற சொல்லும் தலையொன்றி இருப்பதையும்
நீங்கள் காணலாம்.
மிகப் பழங்காலத்து மனிதர்கள் மரங்களில் பைபோலக் கட்டித் தொங்கவிட்டு இரவில் அதனுள் ஏறி உறங்கினர் என்பர். சில
காட்டுவாழ்நர் இன்றும் இங்ஙனம் வாழ்தலைச் சில நாடுகளில்
காணலாம். நல்ல வீடு கட்ட அறிந்து தரையில் பாய்போட்டுப்
படுக்கத் தொடங்கியபின் பை என்ற சொல்லிலிருந்து பாய் என்ற
சொல் திரிந்ததாகத் தெரிகிறது.
பை > பாய்.
ஆனால் தரையில் பரப்பியதுபோல் இடப்படும் காரணத்தால் "பாய்" என்ற சொல் பிறந்தது என்றும் ஆய்வு செல்கின்றது.
பர > பரப்பு.
பர > பார் (பரந்த உலகம்).
பலகை
பத்திரம் (இலை, ஆவ்ணம்)
பாழ் (பரந்த விளைதல் இல்லா நிலம். பயனற்ற இடம்).
பட்டை
பட்டயம்
பட்டாங்கு
பட்டியல்
பட்டோலை
படு, படுக்கை.
இங்ஙனம் பல சொற்கள் ஆங்கிலத்தில் "ஃப்ளாட்" என்ற சொல்போல நிலத்தி ற் படிதல் போன்ற நிலையில் உள்ளவையாய்
காணப்படுதல், யாரும் ஆய்தற்குரியனவாகும்.
இவற்றைப் பின்னர் ஆராயலாம்.
சீனமொழியிலும் "பாவ்" என்றால் கட்டுதல்.. பைப்பொருள் குறிக்கிறது; இதையும் கவனிக்கவேண்டும். ("தா பாவ்")
இவை நிற்க,பைக்கட்டும் பாக்கட்டும் கொண்டுள்ள ஒற்றுமை
மட்டும் குறித்து நிறுத்திக்கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.