அறிவு
என்பது வெளியிலிருந்து
உள்ளுக்குச் செல்கிறது.
தவளை தாவித்
தாவிச் செல்வதை மனிதன்
காண்கிறான்.
அதன்பின்னரே
அது
தாவித்
தாவிச் செல்லும் ஓர் உயிரி
என்பதை உணர்ந்து கொள்கிறான்.
இந்த "அறிவு"
வெளியிலிருந்து
உள்ளுக்குச் செல்கிறது.
அதுவே தொடக்கமாகும்.
அடுத்து,
தவளையைப்
பற்றி அறிந்து கொண்ட ஒரு மனிதன்
ஆசிரியனாகி ஒரு பிள்ளைக்குத்
தெரிவிக்கிறான்.
பிள்ளையும்
அறிவு பெறுகிறது,
இது நேரடியாகக்
கண்டறிந்த அறிவு அன்று,
ஆசிரியன்
வாய்க்கேட்டறிந்ததே ஆகும்.
இது நேரில்
தவளையைக் கண்ட
மாத்திரத்தில்,
பிள்ளைக்குள்
முழுமை பெறுகிறது.
கற்ற அறிவு
உறுதிப்படுகிறது,
அதுகாறும்
அது கேட்டறிந்ததே ஆகும்.
பின் கண்டும்
உறுதி பெறுகிறது.
நாம்
அறிந்த பல, நாம்
நேரிற் கண்டு அறிந்த அறிவு
அல்ல, பிறரிடம்
இருந்து அறிந்துகொண்டவையே
ஆகும். இந்தப்
பிறர், இப்போது
உயிரோடிருப்பவர்,
முன் இருந்தவர்
என இருவகை. முன் இருந்தவர்
எழுதிவைத்ததும் இப்போதிருப்பவர்
எழுதிவைத்து நேரில் நம்மிடம்
சொல்லித்தர இயலாதிருப்பதும் ஆக
இருவகை..
நீண்ட
காலமாக நடப்பில் கடைப்பிடிக்கப்பட்டு
வரும் நெறிகளும் முறைகளும்
ஒன்று திரட்டப்பட்டு எழுத்து
வடிவாக ஆக்கப்பட்டதே
ஆகமங்களும்.
இறைவனைத்
தொழுதற்கும் ஆலயங்கள்
அமைப்பதற்கும் இன்னும் ஏனைய
இறைப்பற்றுத் தேவைகளுக்குமாக,
ஏற்பட்ட
செய்ம்முறைகள்,
எண்ணங்கள்,
கருத்துகள்
முதலியவை இந்த எழுத்துக்களில்
இடம்பெற்றன. இவற்றை
உருவாக்கியவர்கள்,
இறைநலம் போற்று
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள்.
இவற்றை
எழுதும்போது
எந்த
மொழியில் எழுதிவைப்பது என்ற
கேள்வி எழும்,
எழவேண்டும்.
இவற்றைக்
கற்று நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள்
பெரும்பாலும் பூசாரிகளாக இருந்தமையால்,
அவர்கள்
இறைவழிபாட்டு நடப்புகளில்
பயன்படுத்தும் சமஸ்கிருதம்
என்னும் சங்கத மொழியில்
எழுதப்பட்டன. இப்படி
உருவாக்குமுன்,
வேறுமொழிகளில் அல்லது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பல சிறு ஏடுகள்
இருந்திருக்கலாம். இவற்றிலிருந்தும் நடைமுறைகள் திரட்டப்பட்டிருக்கலாம்.
அவை திரட்டப்பட்டு
சங்கத மொழியில்
இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு மிருக்கலாம்.
இந்த இறுதிவடிவத்தின்பின்,
அச்சிறுநூல்கள் தேவை0படாதவை.
அவற்றைக்
கைவிடுதல் என்பது இயல்பானதே.
இப்படிச்
செய்திருக்க மாட்டார்கள்
என்று திட்டவட்டமாகத்
தெரிந்தாலன்றி,
இத்தகைய
நூல்வடிவங்கள்
இல்லையென்று எண்ணிக்கொள்வது
அறியாமையே ஆகும்.
வரலாற்று
அறிவுக்காக பழையனவற்றைச்
சேர்த்து வைத்துப்
பின்
ஆராயும் நடைமுறை,
குறிப்பாகத்
தமிழனிடமும் பொதுவாக
இந்தியனிடமும்
இருந்ததில்லை.இந்த
நிலையில் திடீரென்று எதிர் தோன்றும்
ஒரு ஆகம நூல், இறைவனால்
அருளப்பட்டது என்று சொல்வது,
இயல்பானதே
ஆகும்.சிந்திக்கும்
மூளை இறைவனால் அருளப்பட்டது
என்னில், அதிலிருந்து
போந்த ஆகம விடையங்களும் அவனால்
அருளப்பட்டவையென்றே முடிபுகொள்ளல்,
ஏற்புடைத்தே!.
அவனன்றி
ஓர் அணுவும் அசைவத்தில்லை.
அசைந்த அணுக்களும்
எழுதிய எழுத்துக்களும் அவன்
அசைவே ஆகும்.
ஈர்க்கப்பட்ட
மனத்தின் அசைவையே ஆசை என்கிறோம்:
அசை>
ஆசை,
இது முதனிலை
திரிந்த தொழிற்பெயர்.
இறைவனின்
ஆசையால் மனிதனின் ஆசை எழுந்து,
இவை உருப்பெற்றன.
ஒரு பற்றன் ஒரு நடைமுறையை முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டின், அந்நடைமுடைகள் இறைவனால் அருளப்பட்டவை என்று நம்புதல் இன்றியமையாதது ஆகும். ஆக்கிய அனைத்தும் இறைவனால் ஆக்கப்பட்டவென்பது உண்மைநெறியும் சமயக் கடைப்பிடியும் ஆகும்.
தலைப்பு : இறைவன் ஆக்கிய ஆகமங்கள்
will review to edit and detect hacker attacks.
will review to edit and detect hacker attacks.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.