ராக்காயி, ராக்கம்மா.
இர் என்பது இருள் குறிக்கும் ஒரு தமிழ் வேர்ச்சொல்.
இர் > இருள்
இர் > இரா ( ஆ விகுதி)
இர் > இரவு ( வு விகுதி. அ இடைநிலை)
இர் > இரா + அத்து + இரி = இராத்திரி.
(இரு> இரி: திரிபு.)
இர் > இரா > இராக்காட்சி > ராக்காச்சி. (இரவில் வந்து கடிக்கும்
ஒரு வகைக் கொசு )
இனி, இர்> இராமர். இர்> இராவணன். இர்> இராகுலன் (இரவில்
இயங்கிய போராளிக் கோட்டியினன் ) எனப் பல உள்ளன.
இரவையும் பகலையும் ஆக்குபவள் அம்மை. அத்தேவியின்
ஆற்றலைக் குறிக்கும் வண்ணம்,
இர் > இர்+ஆக்கு+ஆயி = இராக்காயி > ராக்காயி என்ற
சொல் பிறந்தது. சிற்றூர் வரவு இச்சொல்லாகும்.
இர் > இர்+ஆக்கு+ அம்மா = இராக்கம்மா.
இர் > இர்+ ஆக்கு + இ = இராக்கி.
இரவு என்ற சொல்லின் "வு" விகுதியை எடுத்துவிட்டு அமைக்கப்பட்ட
சொற்கள் இவை. சொல்லாக்கத்தில் இத்தகு விகுதிகளை எடுத்துவிடுதல்
ஓர் உத்தியாகும்.
இரவில் பகலவன் இல்லை. பகவோனை அப்புறப் படுத்தி, இரவினைத்
தருபவள் அம்மை. அங்ஙனம் சொல்கையில், அம்மை முழு வல்லமையும் பொருந்தியவள் என்பது இச்சொற்களால் புலப்படுத்தப் படுகின்றது. சிவம் எனற்பாலது செவ்வொளி. முருகனும் செவ்வொளியே. இங்கு நடுநாயகியாக விளங்குபவள், அம்மை அல்லது ஆதிபராசத்தி யாவாள்.
பேச்சாயி ( பேச்சுக்கு ஆயி ) என்ற அழகிய சொல்லமைப்புப் போன்றது
இது.
ரா= ராத்திரி; தா = (ஆத்)தா; ஆகவே "ராக்தா" என்றோரு சொல்லை
ஆக்கி மக்கள் மன்றத்திலே உலவ விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதுவும் "பரவாயில்லை."
இறைமை ஒன்றுதான்; வெளிப்பாடுகள் அல்லது முகிழ்த்திகள் (மூர்த்திகள் ) பலவும் நாமங்கள் ( நாவினால் விளிப்பவை) பலவும்
ஆயின.
Will edit to review autocorrect and third party interference after 5th inst.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.