வித்தகர் என்ற சொல் காண்போம்.
இது முன்பு சிறிது விளக்கம் பெற்றுள்ளது.
விதைத்தல் என்ற வினைச்சொல்லுடன், வித்துதல் என்ற வினைச்சொல்லும் தமிழிலேயே உள்ளது.
வித்துதலும் விதைத்தலே ஆகும்.
கல்வியையும் கருத்துகளையும் ஒரு பெரு மரம்போல் வளர்க்கத்தக்க விதையைத் தம்முள் வைத்திருப்பவர் == ஓர் ஆசிரியர் == வித்தகர்
ஆவர். பேரறிவாளர் என்பது பொருளாம்.
வேதம் என்பது வேய்தல் அடிப்படையில் எழுந்தது என்பது எம்
முடிபு ஆகும். ஆயினும் வித் (வித்துதல்) என்பதனடிப்படையிலே
எழுந்தது என்று மேலையர் கூறுவதால், வித்துதல் என்ற சொல்லிலிருந்து எழுந்திருப்பினும் அதுவும் தமிழ் மூலமே ஆகும்.
வித்தகர் என்பது: வித்து + அகம் + அர் எனப்புணர்ந்து, வித்து+அக+ ர்
என்றாகி, சொல் அமைந்தது. அர் என்ற விகுதி, அகரம் கெட்டு ரகர
ஒற்று மட்டும் நின்றது. வித்து என்பதன் உகரமும் கெட்டது. எனவே
வித் + த் அ + அ + கர் என்பதில் வித் (த்+) (அக)ர் = வித்தகர்
ஆனது. ஒழிந்த ஒலிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அகம்+அர் என்பது அகமர் என்று முடியாமல் அகர் என்றே வந்தது
காண்க. மகர ஒற்றுக் கெட்டு, அக+ வ் + அர் எனப்பொருந்தி, அகவர்
என்றும் வரவில்லை.
கல்வி, கலை ஆய இவற்றை வளர்க்கும் பெரு வித்தினை உடையவர்
என்று பொருளுரைக்கலாமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.