இப்போது கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்க்கலாம்.
கசப்பு என்பது வெறுக்கத் தக்கதாக இருந்துவந்துள்ளது. அடா என்பதும்
அடர்வு, அடைந்துநிற்பது என்று பொருள்தரும். அடு> அடர்> அடர்வு.
அடு>அடா. ஆ என்பது ஓர் விகுதி. இது நிலா ( நில்+ஆ), கலா ( கல்+
ஆ ), பலா ( பல் + ஆ: பல சுளைகளை உடையது ) எனப் பல சொற்களில் வரும்; மேலும் பெயர் அல்லாத சொற்களிலும் வரும்: இல்> இலா; செல் > செல்லா எனக் காண்க. வளைவு குறிக்கும் வில்> விலா (வயிறு அடுத்த எலும்பு). ஐ என்பதும் ஆ என்று திரியும்: தலை> தலா. இவை போதும். விளியிலும் வரும்: கண்ணன் > கண்ணா.
ஆக, வெறுக்கத்தக்கது அடர்வாய் இருக்கும் நிலையே கச்சடா.
இங்கு கச என்பது புணர்ச்சியில் கச்ச என்று சகரம் இரட்டித்தது.
பசு(மை)+ அடி = பச்சடி போல. பசு என்பது பச்சு > பச்ச என இரட்டித்தது.
அறிந்து மகிழ்வீர்
A densely constituted detestabe stuff!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.