இடையில் உள்ள ஒற்றுக்கள் மறைந்து சொற்கள் அமைவதென்பது
தமிழில் பெருவரவான நிகழ்வு ஆகும்.
வேய்தல் : வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.
வேய்தல்: வேய் + து + அன் = வேய்ந்தன் > வேந்தன்
தேய்தல் : தேய் + கு + அம் = தேய்கம் > தேகம்
வாய் வாய் + து + இ = வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.
தாய்: தாய் + தி = தாய்தி > தாதி.
வேய் : வேய் + சி = வேய்சி > வேசி.
நோய்: நோய் + து + ஆன் = நோய்ந்தான் > நோஞ்சான் (திரிபு).
பாய்தல் பாய்+ சு + அன் + அம் = பாய்சனம் > பாசனம்.
காய்தல் காய் + சு + இன் + இ = காய்சினி > காசினி .
இவை முன் இங்கு விளக்கப்பட்டுள்ள சொற்கள். முன் இடுகைகளைக்
காணவும். பின் யாதாயினும் அழிந்திருப்பின் மீளேற்றம் பெறும்.
வேய்தல் என்பது மேலணிந்துகொள்ளுதல். கூரை வேய்தல். அதுபோல்
பாடல்கள் அமைத்தல். வேந்தன் , முடி அணிதலால் வேந்தன் எனப்பட்டான். வாய்ப்பாடம் சொல்பவன் வாத்தி எனப்பட்டான். உப அத்தியாயி ஆகிய உபாத்தியாயி ( `~ யர், ~யினி ) வேறு சொல். பண்டிதர் குழம்பியதுண்டு. பல அணிகலன்களும் வாசனைத் திரவியங்களும் பூசிக்கொள்பவள், பூசி மயக்குபவள் வேசி ஆனாள்.
பாய்தல் இங்கு நீர்ப் பாய்ச்சல்.காய்தல் : வெறுத்து ஒதுக்குவதற்குரிய
போதிக்கப்பட்ட இவ்வுலகம். காய்தல் : வெறுத்தலும் ஆம். வேறு
பொருளுடையதுமாம் இச்சொல்.
யகர ஒற்று மறைந்த சொற்கள் பல இங்கு ஆய்வு செய்யப்பட்டு
விளக்கப்பட்டன. வேதம் : மறைமலையடிகள் விளக்கம். வித்
என்ற சொல்லிற் புறப்பட்ட வேதா என்ற சொல் வேறு. இரண்டும்
ஒரு பொருளையே சுட்டினும் வெவ்வேறு பிறவிகள். ஆங்கிலத்தில்
பேக்கட் என்பது வேறு; தமிழில் பைக்கட்டு என்பது வேறு. ஓலி
ஒப்புமை உள்ளது. பார்லிமென்ட் வேறு; பாராளுமன்று வேறு .சுட்டப்பட்டது
அப்பொருளே ஆயினும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.