Pages

சனி, 25 பிப்ரவரி, 2017

சடங்கு என்ற சொல்

சடங்கு என்ற சொல் எப்படி அமைந்தது என்று பார்ப்பது நன்மை பயக்கும்.

ஒரு பெண் பூப்பு எய்திவிட்டால், அதற்கு அடுத்து நாம்  செய்தற்குரியது
என்ன என்று  சிந்திக்கத் தொடங்கிவிடுகிறோம். தெரியாத தாய்
தெரிந்த இன்னொரு மூதாட்டியிடம் போய் அடுத்து என்ன செய்வது
என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாள்

அடுத்து என்ன?  அடுத்து என்ன? என்பதே கேள்வி.

சடங்கு என்ற சொல் எப்படி அமைந்தது என்று காண்போம்.

சடங்கு என்பதன் உள்ளீடு என்ன?  பெண்ணின் தலையில் நீரூற்றிக்
குளிப்பாட்டுவதா? சிறப்பான அணிகலன்களை அணிவிப்பதா?  ஓர்
அறைக்குள் போட்டுப் பூட்டி வைப்பதா?  இவற்றோடு பற்பல பிற‌
நிகழ்த்துவதா?  ‍‍~~~  என்று கேட்கின், நிகழ்வு பலவாதலினாலும், ஒவ்வொரு
சிறப்புநடபடிக்கும் இவ் உள்நிகழ்வுகள் வேறுபடுதலினாலும்
இனத்துக்கு இனம் நாட்டுக்கு நாடு சடங்குகள் வேறுபடுதலினாலும்
உள்ளீடு என்பதை முன்வைத்துச் சடங்குச் சொல்லாக்கத்தை நடைபெறுவிக்க இயலாது.

சடங்கு என்ற சொல் ஓர்  இயல்புவாழ்க்கை மனிதனால் உருவாக்கப்பட்டது.  புலவன் இதை இங்ஙனம் எளிமையாக‌ எண்ணிப்பார்த்திருப்பான் என்று நான் நினைக்கவில்லை.

இப்போது திரிந்தவிதம்  நோக்குவோம் .

அடு (அடுத்தல். அடுத்து நிகழ்தல்).
அடு > சடு > சடு+அம் + கு.= சடங்கு.
அம்   என்பது   ஓர் இடைநிலையாகவோ, அன்றி அழகு என்று
குறிப்பதாகவோ கொள்ளலாம். பெரும்பாலான சடங்குகள்
முன் நடந்த நிகழ்வைப்  பின் வந்து அழகுபடுத்துவன.

திருமணத்தில்  பாலியல் உறவை அழகுபடுத்தி   (மறைத்துக் )   குமுகத்தார்   அதனை ஏற்ப நடைபெறுவித்தல் போல

 ஆகவே அம் என்ற இடைநிலை நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே நிலைநிறுத்தலாம்.

வேறொரு சமையம் விரித்துரை காண்போம்.

அமை > சமை > சமையம்.  (  a > cha interchageability )

இதை யாம் பல இடுகைகளில் எழுதிச்  சில பொறாதவர்களால்
அழிக்கப்பட்டுள்ளனவாகையின் விதந்துரைத்தல் விடுப்போம்.

Will edit later. We noticed that the moment OR is written (keys depressed)  the computer hangs and
has to be revived.  Interveners have spent much time to block what we are doing.  But it does not
affect the reader.  It is just one of the ways in which they are preventing edits and causing
nuisance. After posting, we hope our posts reach you as we have written and intended them.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.