Pages

வியாழன், 23 பிப்ரவரி, 2017

கடலை அகத்தியர் குடித்தது

கடலை என்ற உணவு, எந்த நாட்டு ஆதி விளைபொருள் என்று முழுமையாகத் தெரியாவிட்டாலும், பிரேசில் என்னும் தேயத்தில்தான்
அது ஐரோப்பியர்களால் முதன்முதல்  காணப்பட்டது.  அங்கு வாழ்ந்த‌
பழங்குடிகள் 3500 ஆண்டுகளாக அல்லது அதற்குமுன்னிருந்து அதனைப்
பயன்படுத்தியுள்ளனர் என்று அறிகிறோம்.

கடலை ஆசியாவிற்குப் பின்னாளில் கொண்டுவந்து பயிரிடப்பெற்றது
என்றாலும் அதற்குத் தமிழில் நல்ல பெயர் அமைந்துள்ளது. கடு+ அல்+ ஐ என இருவிகுதிகள், அல் மற்றும் ஐ புணர்த்திய சொல் அமைந்துள்ளது.
புதிய பொருள்கள் கடினமானதாக இருந்தால், "கடு" என்ற பகுதியைப்
பயன்படுத்திச் சொல் அமைத்தனர்.  கடு+ தாது + இ >  கடுதாதி > கடுதாசி என்று அமைந்ததும் காண்க. தாது = தூள். இங்கு மரத்தூள். மர அரைப்பு.

கடு+அல்+ ஐ = கடலை என்பதும் அதுபோல அமைந்தது.

கடலை பிற்காலத்தில் வந்திருந்தால், அகத்தியர் குடித்தது இந்தக்
கடலையை அன்று என்பது உரிய முடிபு ஆகும்.

மேலும் கடலை குடிக்கும் பொருளன்று என்பதும் காண்க .

அகத்தியர் பற்றி இங்கும் உங்களுக்குத் தகவல்கள் கிட்டலாம்.


(சொடுக்கவும்:)


Unable to justify these paras  now.  They turn out to be disorderly owing to some inherent software fault. So we are resorting to centre alignment.   Apologies.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.