.
மனமானது, பலவற்றிலும் ஈர்ப்பசைவு கொள்ளாது, நிலை நிறுத்தப்படுதல் வேண்டும். ஒன்றன்பால் மனம் அசைவு கொள்ளுமாயின் அது ஆசை எனப்பட்டது. அசை > ஆசை.
சுடு> சூடு என்று முதலெழுத்து நீண்டு வினைச்சொல், பெயரானது போல.
மனம் பலவற்றிலும் சார்ந்து இயங்குமாயின் அது "சா(ர்)+ பல்+இயம்.
சாபல்லியம் என்பது காதுக்கு நன்றாகவே உள்ளதெனினும், சற்று நீண்டுவிட்டது போல் தோன்றவில்லையா? ஆகவே மேலும் சிந்தித்தனர். சா என்பதை ச (குறிலாகக்) குறுக்கினர். இயம் என்பதை அகற்றிவிட்ட நிலையில், அதற்குப் பதிலாக அம் என்ற விகுதி மட்டும் சேர்த்தனர். இப்போது ச+ பல் + அம் = சபலம் ஆனது. பலவற்றிலும் மனம்தாவும் புத்தி என்று பொருள்.
இதில் சார்(தல்) என்பது ச என்று குறுகி உருத்தெரியாமல் கிடக்கிறது, மற்றவை இயல்பாக நின்றன,
நம்மனோர் சொல்லமைப்பில் புயல்போன்றோர்.
சார் > சா > ச .
வெளிப்படை இல்லாத சொற்குறுக்கம் :" சபலம்" .
Note: There was an internet outage at the time this was being edited. Will review.
Now 0107 08062021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.