ஆசலம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாக வுள்ளது. அருணாசலம், தணிகாசலம், வேதாசலம் இன்னும் பல, ஆசலம் என்றால் மலை,
ஆசலம் என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். ( வேறு எப்படிக்
கேட்பது என்று கடாவுதல் வேண்டாம்), வேற்று மொழிச்சொல் போல் ஒலிக்கிறதா? அதற்கு மலைப் பொருள். எப்படி வந்ததென்பது காண்போம்.
ஆசு - (பற்றுக்கோடு, அதாவது 'பிடிமானம்' )
அல் = அல்லாத,
அம் = விகுதி.
இது மலையில் ஏறுகையில் பிடித்துக்கொள்வதற்கோ அல்லது உதவிக்கோ யாரும் எதுவும் இல்லாமல் இடருற்றவன் புனைந்த சொல். அடிக்கடி மழை; குளிர் என்பன போன்ற இயற்கை மிகுதிகளும் உண்டு. அவன் அடைந்த இன்னல் அவனுக்குத்தான் தெரியும், அதனால் இந்தச் சொல்லைப் படைத்தான், சிலருக்கு மலை வாழ்வு இனிக்கும்; சிலருக்கு அது பிடிப்பதில்லை.
இச்சொல் இப்போது அழகுள்ளதாக மிளிர்கின்றது,
ஏறவும் இருக்கவும் உதவாத கடினமான இடம் மலை, மலை என்றாலே மலைப்புத் தருவது. மல் வலிமையும் ஆகும், ஆசலம் மலை என்பதற்குப் பொருட் பொருத்தம் உள்ளது .
தெரியாமலா வேங்கடம் என்று பெயர் வைத்தார்கள். கடம் என்றாலே
கடப்பதற்கும் அரியது மலை.
அமைப்புப் பொருள் இவ்வாறு இருப்பினும் ஆசலம் என்பதன் வழக்குப்
பொருளில் இந்த மலை இடர்கள் தெரிய மாட்டா ,, மலை என்ற சொல்லிலிலும் அவ்வாறு தெரிவதில்லையே .
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்.
Edited on 22.07.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.