தூவானம்
பட்டாலும் தோய்ந்தபடி தேடுமிரை
துரத்திவிடும்
உனது பசியை;
நீவானம்
நின்றபின்னே நேராக எங்குசென்றாய்
நின்மரமோ
மழைநீர் சொட்டும்;
கூவாய்நீ
நின்விடுதி யானறிவேன் கூவிடிலோ
குளிருக்கென்
செய்தாய் மைனா!
தீவானில்
போல்பகலோன்; இருந்தாலோ
திரிந்திடுவாய்;
நான்காண்பேன்
என் நா மெய்நா.
இருள்கவிந்த
முன்னிரவில் படுக்கையில்
கிடக்கின்றேன்;
என்போர்வை
இட்ட காலை
நருள்குவிந்த
இடங்களிலும் மேய்ந்துவிட்டே
ஓய்ந்திருக்கும்
நன்மணியே
இட்டேன் நெஞ்சில்;
பொருள்வேண்டாம்
புகழ்வேண்டாம் உன்போலும்
சிற்றுயிர்க்கோர்
போர்வையே
யான்நயந் திட்டால்
அருள்
ஈண்டும்; அன்புமிகும்;
ஆதலினால் யாதுகுற்றம்
அருளில்லார்
மாந்தர் கூட்டில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.