அயல்திசை மக்கள் வந்தார்
அதிகமாய் அமர்ந்து கொண்டார்
மறலியை வழியில் வேலை
மாதொழில் வளம்க வர்ந்தார்
எனலொரு மனந்தி ரிந்த
எழுச்சியில் திறம்பு கூவிக்
கனல்பெறத் தேர்தல் வென்றார்
காரிகை இலரி வீழ்ந்தார்.
தன் நிலம் தன் தன் வீடு
தன் தொழில் இவற்றைப் பேணும்
பின் படைக் கொள்கை மேவிப்
பேரம ரிக்கர் செல்ல;
பன்முகத் தொழில்வ ளர்த்துப்
பார்பரி மாறிக் கொள்ளும்
பண்புறு ஞாலக் கூட்டுப்
பாழ்படும் வருங்கா லத்தே.
அயலுறு திறம்ப ழிக்கும்
அகலுறு அமெரிக் காவில்
பெயல்வரப் பயிர்கள் நாணிப்
பேணுமோ தம்மைத் தாமே?
கயல்தமைக் கடல்க ழித்தே
அயலென்று வெறுக்க லாமோ?
உயல்பெற உகக்கும் ஞாலம்
தொழில்துறைத் திறப்ப கிர்வே!
மறலியை வழி - முன்னைக் கொள்கைகளை மறுத்தலோடு இயைபுடைய வழிகள் right leaning policies contrary to those established before.
பின்படை - retrogressive.
பெயல் = மழை
உயல் - பிழைப்பு முன்னேற்றம்
திறம்பு: இற்றை அதிபர் டொனால்டு டிரம்ப்.
இலரி : ஹிலரி கிளின்டன்.
திறப் பகிர்வு - share of talents
அதிகமாய் அமர்ந்து கொண்டார்
மறலியை வழியில் வேலை
மாதொழில் வளம்க வர்ந்தார்
எனலொரு மனந்தி ரிந்த
எழுச்சியில் திறம்பு கூவிக்
கனல்பெறத் தேர்தல் வென்றார்
காரிகை இலரி வீழ்ந்தார்.
தன் நிலம் தன் தன் வீடு
தன் தொழில் இவற்றைப் பேணும்
பின் படைக் கொள்கை மேவிப்
பேரம ரிக்கர் செல்ல;
பன்முகத் தொழில்வ ளர்த்துப்
பார்பரி மாறிக் கொள்ளும்
பண்புறு ஞாலக் கூட்டுப்
பாழ்படும் வருங்கா லத்தே.
அயலுறு திறம்ப ழிக்கும்
அகலுறு அமெரிக் காவில்
பெயல்வரப் பயிர்கள் நாணிப்
பேணுமோ தம்மைத் தாமே?
கயல்தமைக் கடல்க ழித்தே
அயலென்று வெறுக்க லாமோ?
உயல்பெற உகக்கும் ஞாலம்
தொழில்துறைத் திறப்ப கிர்வே!
மறலியை வழி - முன்னைக் கொள்கைகளை மறுத்தலோடு இயைபுடைய வழிகள் right leaning policies contrary to those established before.
பின்படை - retrogressive.
பெயல் = மழை
உயல் - பிழைப்பு முன்னேற்றம்
திறம்பு: இற்றை அதிபர் டொனால்டு டிரம்ப்.
இலரி : ஹிலரி கிளின்டன்.
திறப் பகிர்வு - share of talents
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.