ஊழல் உளைக்குள் ஆழப் பதிந்தன
உழலும் நாடுகள் உலகிற் பலவாம்
ஆழப் பதிந்தபின் வீழலும் அழிவும்
ஈழைப் படுதலும் இயல்பே ஆகும்;
மீண்டு மேல்வர ஈண்டி முயல்வன
ஈண்டு பலவே; இரும்பெரு வேர்விரல்
நோண்டிப் பெயர்த்தல் நொய்ம்மைப் பயனே;
முயலும் காலையும் முட்டுக் கட்டைகள்
அயலும் உள்ளும் மிகலே இயல்பே;
முயலும் நல்லரை நிலைபெயர்த் தெறிதல்
இயலும் எல்லா நாட்டிலும் காணீர்;
எனினும் ஊழற்கு இயையார்
நனிநின்று தாங்குதல் நானிலம் போற்றுமே.
உளை - சேறு .
பதிந்தன - பதிந்து. (முற்றெச்சம்)
ஈழை - இழிவு .
ஈண்டி - மிகவும்
இரும்பெரு - மிகப் பெரிய .
மிகலே - அதிகம் ஆகுதலே
நல்லரை - நல்லவரை .
உழலும் நாடுகள் உலகிற் பலவாம்
ஆழப் பதிந்தபின் வீழலும் அழிவும்
ஈழைப் படுதலும் இயல்பே ஆகும்;
மீண்டு மேல்வர ஈண்டி முயல்வன
ஈண்டு பலவே; இரும்பெரு வேர்விரல்
நோண்டிப் பெயர்த்தல் நொய்ம்மைப் பயனே;
முயலும் காலையும் முட்டுக் கட்டைகள்
அயலும் உள்ளும் மிகலே இயல்பே;
முயலும் நல்லரை நிலைபெயர்த் தெறிதல்
இயலும் எல்லா நாட்டிலும் காணீர்;
எனினும் ஊழற்கு இயையார்
நனிநின்று தாங்குதல் நானிலம் போற்றுமே.
உளை - சேறு .
பதிந்தன - பதிந்து. (முற்றெச்சம்)
ஈழை - இழிவு .
ஈண்டி - மிகவும்
இரும்பெரு - மிகப் பெரிய .
மிகலே - அதிகம் ஆகுதலே
நல்லரை - நல்லவரை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.